இணைய தளங்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை -சரத்குமார்
இணையதளங்களை நடிகர் சங்கம் புறக்கணிக்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார்.
ஒரு சில நாட்களுக்கு முன்பு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், ஃபெப்ஸி ஆகிய அமைப்புகளின் கூட்டமைப்பு, திரைப்பட விழாக்களுக்கும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இணையதளங்களுக்கு தடை விதிப்பதாக வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது.
இதனைக் கண்டித்த தமிழ்த் திரைப்பட ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு, திரைப்பட நிகழ்ச்சிகளை முற்றிலுமாக புறக்கணித்து வருகிறது.

இந்த நிலையில் இதுபற்றிய விளக்கத்தை நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம், ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அந்த கேள்வியும் அதற்கு சரத் அளித்த பதிலும்...
கேள்வி : எந்த அடிப்படையில் நீங்கள் சினிமா வலைத்தளங்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளீர்கள், சினிமாவை நேசிக்கும் அவர்களை ஏன் ஒடுக்கப் பார்க்கிறீர்கள்?
சரத் பதில்: இது தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுதானே தவிர, இதற்கும் நடிகர் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டையும் குழப்ப வேண்டாம்.


Click it and Unblock the Notifications











