twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Me Too: புகார்களை விசாரிக்க .. ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கும் நடிகர் சங்கம்

    |

    சென்னை: நடிகை நயன்தாராவின் கோரிக்கையை ஏற்று மீ டு இயக்கம் தொடர்பான புகார்களை விசாரிக்க ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கவுள்ளது நடிகர் சங்கம்.

    மீ டூ இயக்கம் கடந்த 2018 ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தியாவெங்கும் பேசுபொருளானது. அதுவரை பேசத் துணியாத பல துறையை சேர்ந்த பெண்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான வன்முறைகளை, பணியிடங்களில் ஆண்களால் ஏற்பட்ட ஒடுக்குமுறைகளை பேசத் துவங்கினர்.

    Nadigar Sangam to create Committee to probe Me too complaints


    நாடு முழுவதும் பல பிரபலங்கள் மீது இந்த குற்றசாட்டு எழுந்தது. தமிழகத்தில் பின்னணிப் பாடகி சின்மயி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் இது தொடர்பாக பத்திரிக்கைகளுக்கு பேட்டியும் அளித்தனர். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. தமிழகத்தில் கவிஞர் வைரமுத்தது, நடிகர் அர்ஜூன், இயக்குனர் சுசி கணேசன் உட்பட பல பிரபலங்கள் மீது இந்த குற்றசாட்டு வைக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் குற்றசாட்டின் அல்டிமேட்டாக மோடி அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஒருவரும் இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

    இந்த மீ டூ இயக்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, அமைச்சர் மேனகா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சச்சின் பைலட், சல்மான் குர்ஷித், விவேக் தன்ஹா, கபில் சிபல், ஸ்ரீனிவாஸ் பி.வி., சசி தரூர் மத்திய அமைச்சர் உமா பாரதி, பாஜக எம்பிக்கள் மீனாட்சி லேகி மற்றும் பூனம் மஹாஜன் ஆகியோர் இந்த இயக்கத்தை வரவேற்றனர். திமுக எம்.பி. கனிமொழி தனது ஆதரவை தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களை நம்ப வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதே வேளையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீ டூ இயக்கம் வக்கிரபுத்தி உள்ளவர்களின் செயல்பாடு என்று விமர்சித்தார்

    இந்த நிலையில் மீ டூ இயக்கம் சில காலம் சற்று அமைதியாக இருந்தது. இப்போது நயன்தாரா வடிவில் அது மீண்டும் உயிர் பெற்றுள்ளது. சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை பற்றி பேசியிருந்தார். தொடர்ந்து பேசும்போது சினிமாவில் சிலரை பார்த்தால் கை எடுத்து கும்பிட தோன்றுகிறது சிலரைப் பார்த்தால் கூப்பிட தோன்றுகிறது என்று பேசினார். இது பலத்த சர்ச்சையை கிளப்பியது. இதற்கு ராதாரவி உடனடியாக மன்னிப்பும் கேட்டார். ஆனால் நடிகை நயன்தாரா இந்த விவகாரத்தை நடிகர் சங்கத்திற்கு கொண்டு சென்றார். அங்கு நடிகர் சங்கத்திடம் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஐ சி சி அமைப்பை உருவாக்கி விசாகா வழிகாட்டுதலின்படி விசாரணை குழு ஏற்படுத்துவீர்களா என்று கேள்வி கேட்டிருந்தார்.

    இந்த கோரிக்கைய ஏற்றுக் கொண்ட நடிகர் சங்கம் மீ டூ ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இந்த குழு நடிகர் நாசர் தலைமையில் இயங்கப் போகிறது. இந்த குழுவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, மற்றும் பூச்சி முருகன், நடிகைகள் குஷ்பு, ரோகினி,, சுகாஷினி உட்பட சமூக ஆர்வலர் ஒருவர், வழக்கறிஞர் ஒருவர் என 9 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    திரைத் துறையில் பணியாற்றும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகள் குறித்து இந்த குழுவில் முறையிடலாம். இந்த புகார் குறித்து இந்த குழு விசாரிக்கும் இந்த குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது

    English summary
    Nadigar Sangam has formed a committee to probe the Me Too complaints on actresses and other Tamil Cinema women.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X