ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதத்துக்கு வரலேண்ணா... - நடிகர் நடிகைகளுக்கு எச்சரிக்கை

நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் திரைப்பட தொழில் கலைஞர்களுக்கு மத்திய அரசு 12.3 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு திரைப்பட துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
சேவை வரி விதிப்பதை கண்டித்து வருகிற 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
அன்றைய தினம் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. வள்ளுவர் கோட்டம் அல்லது சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாவிரதம் நடைபெறும் எனத் தெரிகிறது.
உண்ணாவிரதத்தில் நடிகர், நடிகைகள் அனை வரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க கூடாது என்றும், படங்களுக்கு அவர்களை ஒப்பந்தம் செய்யக் கூடாது என்றும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











