ஜீன்ஸ் – டி ஷர்ட்டில் ஸ்டைலா சிவாஜியை பார்த்திருக்கீங்களா...வைரலாகும் அன்சீன் ஃபோட்டோ
சென்னை : அறிமுகம் எதுவம் தேவைப்படாத ஒரு நடிகர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். இப்போதும் நடிப்பிற்கு டிக்ஷனரியாக இருப்பவர். மறைந்து 20 ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் புகழின் உச்சத்தில் இருப்பவர் சிவாஜி.
சிவாஜி, 2001 ம் ஆண்டு ஜுலை மாதம் காலமானார். ஏறக்குறைய 10 ஆண்டுகளாக இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவாஜிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிப்பிற்கு உதாரணம்
தமிழில் 275 படங்களிலும், மற்ற மொழிகளில் 13 படங்களிலும் சிவாஜி நடித்துள்ளார். அவர் நடித்த ஒவ்வொரு கேரக்டரும் தனித்துவமானதாக இருக்கும். அந்த கேரக்டராகவே மாற கூடியவர் சிவாஜி. நடிப்புக்கு உதாரணமாக சொல்லப்படுபவரும் சிவாஜி தான்.

திடீரென வைரலான ஃபோட்டோ
இந்த தலைமுறை சினிமா ரசிகர்களும் கூட ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும் அவர் கடைசியாக நடித்த தேவர் மகன், படையப்பா போன்ற சில படங்கள். இந்நிலையில் சிவாஜியின் அன்சீன் ஃபோட்டோ ஒன்று இணையத்தில் பரவி, திடீரென வைரலாகி வருகிறது.

அன்சீன் ஃபோட்டோ
இந்த ஃபோட்டோ , சிவாஜி அமெரிக்கா சென்ற போது எடுக்கப்பட்டதாம். தனது வழக்கமான வெள்ளை தாடியில் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக வெள்ளை நிறத்திலேயே உடை அணியக்கூடிய சிவாஜி, இந்த ஃபோட்டோவில் கலர்ஃபுல்லாக, ஸ்டையிலாக உடை அணிந்து காணப்படுகிறார்.

ஸ்டைலிஷ் லுக்
இந்த ஃபோட்டோ, அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற போது எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் தோற்றத்தில் அவரது வழக்கமான தேஜஸ் குறையாமல் இருப்பதை பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications