விஷால், விஜய் சேதுபதிக்கு சம்பளப் பாக்கி.. ‘96’ படத்தயாரிப்பாளருக்கு ஒத்துழையாமை நோட்டீஸ்

தயாரிப்பாளர் நந்தகுமாருக்கு ஒத்துழையாமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Recommended Video

96 படத்தயாரிப்பாளருக்கு ஒத்துழையாமை நோட்டீஸ்- வீடியோ

சென்னை: 96 திரைப்பட தயாரிப்பாளருக்கு நடிகர் சங்கம் ஒத்துழையாமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய் சேதுபதி - திரிஷா நடித்த 96 திரைப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார், நடிகர் விஷாலுக்கு சம்பளப்பாக்கி வைத்திருந்த விவகாரம் ஏற்கனவே பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. படம் ரீலிசாகி 5வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

NadigarSangam issues non-cooperation letter against 96 movie producer

இந்நிலையில் சென்னையில் இன்று நடிகர் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் நந்தகுமாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்" தயாரிப்பான "துப்பறிவாளன்" என்ற திரைப்படத்தில் சங்க உறுப்பினர்கள் விஷால் நடித்தமைக்காகவும், "வீரசிவாஜி" என்ற திரைப்படத்தில் விக்ரம்பிரபு நடித்தமைக்காகவும் ஊதிய பாக்கி வழங்கப்படாமல் உள்ளது.
மேலும் "96" என்ற திரைப்படத்தில் நடித்த சங்க உறுப்பினர் விஜய்சேதுபதி ஊதிய பாக்கி பெற்றுக் கொள்ளாமலேயே திரைப்படம் திரையிடப்பட்டது.
மேற்கண்ட திரைப்படங்கள் திரையிடும் கடைசி நேரத்தில் நடிகர்களின் சூழ்நிலையை இந்த தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து ஊதியம் வழங்காமல் படங்களை திரையிட்டுள்ளது.
படம் வெளியீட்டின் போது இக்கட்டான சூழ்நிலையில் என்றும் நடிகர்கள் தங்கள் வருமானத்தை விட்டுக்கொடுத்தே தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனால் அந்நற்செயலை பலவீனமாக எடுத்துக்கொண்டு சில தயாரிப்பாளர்கள் நடிகர்களை நிர்பந்தப்படுத்துவது அல்லது பரஸ்பரம் ஒத்துக்கொண்ட சம்பளத்தை தர மறுப்பது என்பதை வழக்கமாக்கி கொண்டது.
கடந்த காலங்களிலிருந்தே பல தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு இதுப்போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் இதுகுறித்து நிர்வாகக்குழு கலந்து ஆலோசித்தது.

அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் இதுப்போன்று செயல்படும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் / தயாரிப்பாளருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள் (நடிகர்கள்/நடிகையர்கள்) எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கவேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் தற்போது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனம் சம்பந்தமான எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் நமது சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக்கொள்கிறது".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X