»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சன் டி.வியில் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக கூறப்படும் நடிகர்சரத்குமாருக்கு, அந்த நிகழ்ச்சிக்கான சம்பளத்தைக் கொடுக்கக் கூடாது என சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சன் டி.வியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி வர இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர்சரத்குமார் நடத்துகிறார். நடிகர் சரத்குமாருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தொகையை அவருக்கு கொடுக்கவேண்டாம் என்று சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் மற்றும்ராடன் பிக்சர்ஸ் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு நடிகர் சரத்குமார் மற்றும் சம்பந்தப்பட்டநிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

ராயப்பேட்டை பெனிபிட் பண்ட் ( ஆர்.பி.எஃப்) நிதி நிறுவனம் சார்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆர்.பி.எஃப் நிதி நிறுவனத்திடமிருந்துஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் நடிகர் சரத்குமார் கடனாக பெற்றார்.

இன்றைய தேதியோடு வட்டி சேர்த்து சுமார் மூன்று கோடிரூபாய் வரை அவர்தரவேண்டியுள்ளது. கடனுக்கான வட்டியை சரத்குமார் காசோலையாக அளித்தார்.அந்த காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவந்தது. இது தொடர்பாகமாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

ஆர்.பி.எஃப் நிறுவனத்திற்கு தர வேண்டிய தொகையை தராமல் சரத்குமார் தவிர்த்துவருகிறார். உயர் நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகு தான் பத்து லட்ச ரூபாயை அவர்செலுத்தினார்.

கோன் பனேகா குரோர்பதி - என்னும் இந்தி நகழ்ச்சியை அடிப்படையாக வைத்துதமிழில் கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியை நடிகர் சரத்குமார் நடத்தப் போவதாகபத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை சன் டி.வி ஒளிபரப்புகிறது. ராடான் பிக்சர்ஸ் நிறுவனம் இதைதயாரிக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக சரத்குமாருக்கு ஒரு தொகைஅளிக்கப்படுவதாக தெரிகிறது.

எனவே, நடிகர் சரத்குமாருக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்படும் என்பதைசுமங்கலி பப்ளிகேஷன்ஸ் ( சன் டி.வி), ராடான் பிக்ஸர்ச்ஸ் நிறுவனங்கள்நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு உத்திரவிடவேண்டும்.

கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்காக சரத்குமாருக்கு கொடுக்க வேண்டிய தொகையைநீதிமன்றத்தில் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்திரவிடவேண்டும்.

தான் நடிக்கும் டி.வி தொடர்கள் மற்றும் தற்பொழுது உள்ள ஒப்பந்தங்கள் பற்றியவிபரங்களை தெரிவிக்குமாறு சரத்குமாருக்கு உத்திரவிடவேண்டும் என்று மனுவில்கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, நடிகர் சரத்குமாருக்கு எந்தத் தொகையும்அளிக்க வேண்டாம் என்று சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் மற்றும் ராடான் பிக்சர்ஸ்நிறுவனங்களுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நடிகர் சரத்குமார், சுமங்கலிபப்ளிகேஷன்ஸ், ராடான் பிக்சர்ஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிஉத்தரவிட்டார்.

Read more about: chennai tamilnadu vijayakanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil