ஆட்களோடு வந்து மிரட்டினாரா பயில்வான் ரங்கநாதன்? நடிப்பு அரக்கன் திவாகர் என்ன இப்படி சொல்றாரு?

சென்னை: கடந்த வாரத்தில் பயில்வான் ரங்கநாதனுக்கும் வாட்டர் மெலன் ஸ்டார் நடிப்பு அரக்கன் திவாகருக்கும் இடையில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் அவரது ஆட்களுடன் வந்து பிரச்னை செய்ததாக தெரிவித்துள்ளார். இது பலருக்கு ஷாக் கொடுத்துள்ளது.

என் காதலே படத்தின் பிரிவியூ கடந்த வாரத்தில் சென்னையில் நடைபெற்றது. படத்தின் திரையிடல் முடிந்த பின்னர் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாட்டர்மெலன் ஸ்டார் என அறியப்படுகிற, திவாகர் வந்திருந்தார். அவர் அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, பயில்வான் ரங்கநாதன் மற்றும் சில பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வியால், திவாகர் கோபமடைந்து, அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இது சர்ச்சையாக மாறிய நிலையில், தற்போது அந்த சம்பவம் குறித்து திவாகர் விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் பேசும்போது, " என் காதலே படத்தில் நான் நடிக்கவில்லை. என்னை படத்தின் புரோமோசனுக்கு அழைத்தார்கள். நான் முதலில் முடியாது என்று கூறிவிட்டேன். அதன் பின்னர் சுமார் அரை நாள் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்படி இருக்கும்போது ஒரு கட்டத்தில் நான் புரோமோசனில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தேன். அப்படித்தான் அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். அதனை எனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன்.

Nadippu Arakkan Watermelon Diwakar Attacks Bayilvan Ranganathan

பயில்வான் ரங்கநாதன்: அங்கு நான் பேசும்போது, பயில்வான் ரங்கநாதன் குறுக்கே பேசினார். அது நாகரீகமற்ற செயல். நான் பேசி முடித்த பின்னர் அவர் பேசியிருக்கலாம். தமிழ்நாட்டின் நடிப்பு அரக்கன் என்று என்னை நான் சொல்லுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள். பயில்வான் ரங்கநாதன் மட்டும் இல்லாமல் அவர் அவரது ஆட்களுடன் வந்து பிரச்னை செய்தார். அங்கு இருந்தவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்கள் கிடையாது. பத்திரிகையாளர்கள் என்றால் அவர்களுக்கு என்று ஒரு தரம் உள்ளது. அப்படி இருக்கும்போது, என்னைப் பார்த்து ஒருவர், ' நீ எல்லாம் ஒரு ஆளா?' என்று கேட்கிறார் என்றால் அவரை எப்படி பத்திரிகையாளராக ஏற்றுக் கொள்ள முடியும்.

ரோலக்ஸ்: நான் இதுவரை 5 படங்களில் நடித்துள்ளேன். அதில் முதல் படம் வரும் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. விஜய் சேதுபதியுடன் ஏஸ் படத்திலும் ஒரு காட்சியில் நடித்துள்ளேன். அது விக்ரம் படத்தில் உள்ள ரோலக்ஸ் கதாபாத்திரத்தை போல மிகவும் முக்கியமான கதாபாத்திரம். ஆனால் இந்த படத்தில் எனக்கு வசனம் கிடையாது. நான் நடித்துள்ள 5 படங்களில் முதல் மூன்று படங்களில் வசனம் கிடையாது.

அதிர்ச்சி: நான்காவது படத்தில் நான் டயலாக் பேசுவேன். ஐந்தாவது படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே நடித்துள்ளேன். மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறேன். அது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய கிளைண்ட், எங்கள் ஊரில் உள்ளவர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகிறார்கள்" என்று பேசியுள்ளார். இதில் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்த பிரச்னையை பயில்வான் ரங்கநாதன் அவரது ஆட்களுடன் வந்து பிரச்னை செய்தார் என்று குறிப்பிட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X