சிறு சிறு மழையே வந்தாலே… நந்திதா ஸ்வேதாவின் கலக்கல் வீடியோ !

சென்னை : நடிகை நந்திதா ஸ்வேதா, ஐபிசி 376, இடம் பொருள் ஏவல், வணங்காமுடி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழ், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் முக்கியமான நடிகைகையாக திகழ்ந்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனக்கு பிடித்தமான கருப்பு உடையில் சூப்பரான வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னடத் திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார் நந்திதா. அந்த படத்தில் நந்திதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து தனது பெயரை நந்திதா ஸ்வேதாவாக மாற்றிக்கொண்டார்.

அறிமுகம்

அறிமுகம்

பின்னர், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் தினேஷூக்கு ஜோடியாக நடித்திருப்பார் நந்திதா ஸ்வேதா. அந்தப்படம் தான் முதன்முறையாக இவர் அறிமுகமான தமிழ் திரைப்படமாகும். அடுத்ததே விஜய் சேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

விஜய்யுடன்

விஜய்யுடன்

இதையடுத்து, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா ஆகிய படங்களிலும், தளபதியின் புலி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். சிறிது நேரமே அந்த கதாபாத்திரம் வந்தாலும் அந்த கதாபாத்திரம் நின்னு பேசும் அளவுக்கு இருந்தது. என்னத்தான் திறமையான நடிகையாக இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் சரி வர அமைய வில்லை.

கருப்பு உடையில்

கருப்பு உடையில்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு அப்லோடு செய்து வருகிறார், ஊரடங்கில் இணையத்திலேயே பொழுதை கழித்து வரும் இவர் தனது, இஸ்டாகிராம் பக்கத்தில தனக்கு பிடித்தமான கருப்பு உடையில் அழகான முக பாவத்துடன் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு பல இளசுகள் தங்களது இதயத்தை பரிசளித்து வருகின்றனர்.

போலீஸாக

ஐபிசி 376 திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும், இடம் பொருள் ஏவல், வணங்காமுடி ஆகிய படங்களிலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X