சோலோவாக தியேட்டர்களில் கெத்து காட்டும் டகால்டி.. இருந்த ஒரு போட்டியும் கடைசி நேரத்துல ஆப்சென்ட்!

Recommended Video

Dagaalty Public Opinion | Santhanam | Rithika Sen | Yogi Babu

சென்னை: சந்தானத்தின் டகால்டி படத்துக்கு போட்டியாக இருந்த சசிகுமாரின் நாடோடிகள் 2 கடைசி நேரத்தில் உயர்நீதிமன்ற தடையால் ரிலீசாகவில்லை.

18 ரீல்ஸ் தயாரிப்பில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், யோகி பாபு, ரித்திகா சென் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள டகால்டி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சந்தானம் மற்றும் யோகி பாபுவின் கவுன்ட்டர் காமெடிகள் செம்மையா ஒர்க்கவுட் ஆகி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரிலீசுக்கு தடை

ரிலீசுக்கு தடை

ஜனவரி 31ம் தேதியான இன்று சந்தானத்தின் டகால்டி, சசிகுமாரின் நாடோடிகள் 2 மற்றும் மாயநதி ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தன. தயாரிப்பு தரப்பு பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் சசிகுமாரின் நாடோடிகள் 2 படத்தின் ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

ஷோ கேன்சல்

ஷோ கேன்சல்

நேற்று இரவு ஏதாவது செட்டில்மென்ட் செய்து பிரச்சனையை தீர்த்து இன்று நாடோடிகள் 2 படத்தை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு, ஷோ கேன்சல் என்ற செய்தி ஏமாற்றத்தை தந்தது. பல தியேட்டர்களில் இன்று ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நாடோடிகள் 2 ரிலீசாகவில்லை.

போட்டி இல்லை

போட்டி இல்லை

இதனால், சந்தானத்தின் டகால்டி படத்திற்கு இருந்த பெரிய போட்டி கடைசி நேரத்தில் ஆப்சென்ட்டாக நாடோடிகள் 2 படத்தை பார்க்க வந்த ரசிகர்களும், காமெடி படமான டகால்டி கண்டு களிக்க டிக்கெட் வாங்கி படம் பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் டகால்டி கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன கதை

என்ன கதை

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பெண்ணை மும்பைக்கு கடத்தி வர டகால்டி சந்தானத்துக்கு ஒரு வேலை வருகிறது. அந்த பெண்ணை மும்பை கடத்தி செல்லும் சந்தானம், யோகி பாபுவுடன் சேர்ந்து செய்யும் காமெடி கலந்த அட்டகாசம் தான் படத்தின் கதை. காமெடியை தாண்டி ஆக்‌ஷன் மற்றும் ரொமான்ஸிலும் சந்தானம் கெத்து காட்டுகிறார்.

காமெடி பட்டாளம்

காமெடி பட்டாளம்

சந்தானம் மற்றும் யோகி பாபுவை தாண்டி டகால்டி படத்தில் காமெடி நடிகர்களின் பட்டாளமே இருக்கிறது. தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம், மனோ பாலா, சந்தான பாரதி, ராதா ரவி, ரேகா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கியமான ரோல்களில் நடித்து கதைக்கும் காமெடிக்கும் வலு சேர்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X