சசிகுமார் படத்தில் அஞ்சலி, அதுல்யா... நாடோடிகள் 2 ஷூட்டிங் தொடக்கம்!

By Vignesh Selvaraj

சென்னை : கடந்த 2009-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'நாடோடிகள்'.

சமுத்திரக்கனி இயக்கியிருந்த இந்த படத்தில் சசிக்குமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

நட்பை மையப்படுத்தி, நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிய இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

நாடோடிகள் 2

நாடோடிகள் 2

இந்நிலையில், 'நாடோடிகள்' படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருக்கிறது. இதில் சசிகுமார் - அஞ்சலி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதுல்யா ரவி, பரணி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசை

ஜஸ்டின் பிரபாகரன் இசை

நாடோடிகள் பிலிம்ஸ் மற்றும் இன்ஸ்பைர் என்டர்டெயின்மென்ட் இணைந்து பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

பூஜையுடன் தொடக்கம்

பூஜையுடன் தொடக்கம்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா உள்ளிட்டோர் நடிக்கும் 'நாடோடிகள் 2' படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தின் பூஜையில் இயக்குநர் மற்றும் நடிகர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

மதுரை பகுதிகளில் ஷூட்டிங்

மதுரை பகுதிகளில் ஷூட்டிங்

'நாடோடிகள் 2' படத்தின் மூலம் அஞ்சச்லி சசிகுமாருடன் முதல்முறையாக இணைகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X