விஷால் பட நடிகை பகிர்ந்த புகைப்படம்.. அப்போ அவர் இல்லையா மாப்பிள்ளை... குவியும் வாழ்த்து
சென்னை: நாடோடிகள் படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் அபிநயா. பின்பு ஈசன், பூஜை, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நடித்தும் வருகிறார்.சமீபத்தில் விஷாலுக்கும் திருமணம் என்ற செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், 15 வருடமாக நண்பரை காதலித்து வருகிறேன் என்றும் விளக்கம் அளித்தார். இதனிடையே, ரசிகர்களுக்கும் திரை பிரபலங்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பனிமலர்: ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்த பனி படத்தில் அபிநயா நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதில்,அவரது நடிப்பையும் தாண்டி மலையாள பெண் போன்று சாரியில் வரும் காட்சிகளுக்கு ரசிகர்கள் அன்பு மழையை பொழிந்தனர். அண்மையில் இதுதொடர்பான வீடியோக்களும் வைரலானது. பேச தெரியாத பெண்ணாக திரையுலகில் சாதித்து வரும் அபிநயாவிற்கு ரசிகர்கள் ஆதரவு ஏராளம். அவரை பனிமலர் போன்று இருப்பதாகவும் திரையுலக ரசிகர்கள் வருணித்தனர்.

சர்ச்சை: ஒரு பெரிய ரவுடிக்கும் பணத்திற்காக கொலை செய்யும் 2 இளைஞர்களுக்கும் ஏற்படும் மோதலை அடிப்படையாக வந்த பனி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், ஓடிடியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இருப்பினும் இப்படத்தில் அபிநயா பாலியல் ரீதியாக துன்பப்படும் காட்சிகளை மிகவும் ஆபாசமாக இருந்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பின. சமீபத்தில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அபிநயா, அந்த காட்சி படத்தில் இடம்பெற வேண்டும் என்பதும், அதில் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதும் ஏற்கனவே இயக்குநர் எடுத்த முடிவாக இருக்கிறது. இதில் என்னால் தலையிட முடியாது என்றும் அபிநயா தெரிவித்திருந்தார்.

சாதனை: காது கேட்காமல், வாயும் பேசமுடியாமல் சைகை மொழியால் கதைகளை உள்வாங்கி கடந்த 15 வருடங்களாக சினிமாவில் தனித்த அடையாளத்தை பெற்று எல்லோருக்கும் பிடித்த நடிகையாக வெற்றி நடை போட்டு வருகிறார் அபிநயா. திரைத்துறைக்கு வந்து இத்தனை ஆண்டுகளை கடந்து கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்த அவர் அண்மையில் தன் காதல் குறித்து மனம் திறந்து பேசினார். இதில், விஷால் குறித்த வதந்தி செய்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

15 வருடம் காதல்: என்னுடைய பால்ய கால சிநேகிதர்தான் என் பாய் ஃபிரண்ட். நாங்கள் 15 வருடங்களாக இந்த உறவைத் தொடர்கிறோம். விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் விஷாலுடன் ஒப்பிட்டு பேசுவது முட்டாள்தனமானது. மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷனில் கை நடுங்கியபடி விஷால் பேசியிருந்தார். இது குறித்து அவரிடம் மெசேஜ் அனுப்பி உடல் நலம் குறித்து விசாரித்தேன். அவர் வைரல் காய்ச்சல்தான். இப்போது நலமாக உள்ளேன் என்று கூறினார். விஷால் மிகவும் நல்லவர் என அபிநயா தெரிவித்திருந்தார்.

திருமணம்: தற்போது நடிகை அபிநயாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. அந்த போட்டோவை அவரே வெளியிட்டு இருக்கும் நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. காதலனின் முகம் ஏதும் தெரியவில்லை. இருவரது கைகளுடன் கோயில் மணியை தொடுவது போன்ற புகைப்படத்தை மட்டுமே அபிநயா பகிர்ந்துள்ளார். இதற்கு திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications