பலாத்காரம், கொலை, பழி வாங்கல்... மீண்டும் அதே பேய்க்கதை!
சென்னை: இது பேய்ப்படங்கள் காலம் எனலாம். அந்தளவிற்கு பேய்ப்ப்டங்கள் ரிலீசாகி மிரட்டுகின்றன.
பொதுவாக பேய்ப்படங்கள் என்றாலே பிளாஷ் பேக், கொலை, பழி வாங்கல் என்ற ஒரே மாவைத் தான் வெவ்வேறு அச்சுக்களில் ஊற்றி பலகாரமாக்குகிறார்கள் நம்மவர்கள். அந்தவகையில், நடு இரவு என்ற பேய்ப்படம், 12 மணி நேரத்தில் உருவாக்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே, 24 மணி நேரத்தில் உருவான சுயம்வரம் படம் கின்னஸ் சாதனைப் படைத்தது. அந்தவகையில் இந்தப் புதிய படம் 12 மணி நேரத்தில் படமாக்கப் பட்டுள்ளது.

புது முகங்கள்...
புதுகை மாரிசா இயக்கும் இப்படத்தின் நடிகர்கள் அனைவருமே புது முகங்கள் தானாம். முக்கிய வேடத்தில் மோனிகா என்ற சிறுமி நடிக்கிறார்.

போஸ்டரில் சிறுமி...
இப்படத்தின் போஸ்டர் மற்றும் ஸ்டில்களைப் பார்த்தாலே படத்தின் கதையை நாமே ஊகித்து விடலாம் போல. வழக்கமான பேய்ப்படம் போல மாவு பூசிய முகத்துடன் சிறுமி நிற்பது போன்ற போஸ்டர்.

சிறுமி சாட்சி...
மேலும், படம் தொடர்பாக வெளியாகியுள்ள போஸ்டரில் பெண் ஒருவரை வீடு புகுந்து ஒருவர் பலாத்காரம் செய்ய முயற்சிப்பது போன்று சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை ஒரு சிறுமி நேரடியாக பார்க்கிறாள்.

மகள்...?
பாதிக்கப்பட்ட பெண் கருப்பு நிற சுடிதார் போன்ற ஒன்றை அணிந்துள்ளார். எனவே அச்சிறுமி அப்பெண்ணின் மகளாகவோ அல்லது பக்கத்து வீட்டுச் சிறுமியாக இருக்கலாம்.

கொலை...?
மற்றொரு புகைப்படத்தில் அச்சிறுமி மயக்கமுற்று இருப்பது போல் அமர்ந்திருக்கிறார். பட போஸ்டரை இப்புகைப்படத்தோடு தொடர்பு படுத்தி பார்த்தால், பலாத்காரம் செய்ய முயற்சித்த நபர் இச்சிறுமியைக் கொன்றிருக்க வேண்டும்.

மீதிக்கதை...
பின்னர், அச்சிறுமி ஆவியாக வந்து அந்த பாவியைப் பழி வாங்குவது தான் மீதிக்கதையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது.

சாதனை முயற்சி...
சாதனை முயற்சியாக வித்தியாசமாக 12 மணி நேரத்தில் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்ட படக்குழு கொஞ்சம் கதையையும் வித்தியாசமாக சிந்தித்திருக்கலாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications