twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    9 வருடமாச்சு....நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...நினை

    |

    சென்னை : அறிமுக இயக்குனரான பாலாஜி தரணீதரன் எழுதி, இயக்கிய பிளாக் காமெடி படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இந்த படத்தை வி.எஸ்.ராஜ்குமார், லியோ விஷன் ஸ்டூடியோ பேனரில் தயாரித்திருந்தார்.

    கதை பிடிக்கவில்லை... 'ராட்சசன்' பட இயக்குநரை சூடாக்கிய தனுஷ்... தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்! கதை பிடிக்கவில்லை... 'ராட்சசன்' பட இயக்குநரை சூடாக்கிய தனுஷ்... தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்!

    விஜய் சேதுபதி, காயத்ரி சங்கர், விக்னேஷ்வரன் பழனிசாமி, ராஜ்குமார், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் 2012 ம் ஆண்டு நவம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டு இன்றுடன் 9 வருடங்கள் நிறைவடைந்து விட்டது.

    6 மொழிகளில் ரீமேக்

    6 மொழிகளில் ரீமேக்

    பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று, பெரிய அளவில் ஹிட்டான இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, மராத்தி, குஜராத்தி ஆகிய 6 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு வேத் சங்கர் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசை அமைத்திருந்தனர்.

    நிஜ கதை

    நிஜ கதை

    திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் தலையில் அடிபட்டு குறிப்பிட்ட சில நினைவுகளை மட்டும் இழந்து விடும் இளைஞரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை காமெடி கலந்து சொல்லப்பட்டிருப்பது தான் படத்தின் கதை. ஒளிப்பதிவாளர் பிரேம் குமாரின் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் படத்தின் கதை.

    கேமிராமேனின் கதை

    கேமிராமேனின் கதை

    வாரணம் ஆயிரம் படத்தில் அசிஸ்டென்ட் கேமிராமேனாக வேலை செய்து கொண்டிருந்த போது பிரேம்குமார், திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருந்த நிலையில் தலையில் அடிபட்டு, குறிப்பிட்ட சில நினைவுகளை இழந்தார். இந்த சம்பவத்தை திரைக்கதையாக எழுதி தான் இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் நினைவுகளை இழந்த ஹீரோ விஜய் சேதுபதி பேசும் நீண்ட வசனத்தை சரியான வார்த்தைகளுடன் எழுதுவதற்கு 2 மாதங்கள் எடுத்துக் கொண்டதாம்.

    நீக்கப்பட்ட காட்சிகள்

    நீக்கப்பட்ட காட்சிகள்

    ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்த நீர்பறவை படத்துடன், இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. செப்டம்பர் மாதமே ப்ரிவ்யூ ஷோ திரையிடப்பட்ட நிலையில் பல காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு, நவம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. ப்ரீமியர் ஷோ முடிந்த பிறகு 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை வெளியிட்டனர்.

    நினைவுகூர்ந்த விஜய்சேதுபதி

    நினைவுகூர்ந்த விஜய்சேதுபதி

    இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்டரை ட்விட்டரில் பதிவிட்டு, 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிப்பிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

    English summary
    Naduvula konjam pakatha kanom movie completes 9 years of theatrical release today. This movie was based on the real life story of a cinematographer premkumar. now vijay sethupathi remembers and shared the poster of this film in twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X