மெடுல்லா ஒப்லாங்கேடா.. இது மலையாள 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்!'
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இப்போ மலையாளத்திலும்... வேந்தர் மூவீஸ தயாரிக்கிறது!
சமீபத்தில் வந்த மிகச் சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்று எனப் புகழப்பட்ட விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தை மலையாளத்தில் தயாரிக்கிறார்கள்.

மெடுல்லா ஓப்லாங்கடா
இந்தப் படத்துக்கு மெடுல்லா ஓப்லாங்கடா என தலைப்பிட்டுள்ளனர். சுரேஷ் நாயர் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடித்த வேடத்தில் ராகுல் மாதவ் நடிக்கிறார். சாய்ஜு குரூப், ஆவானா, ராக்கெந்து. அர்ஜூன் நந்தகுமார், முரளிமோகன், நந்து உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

வேந்தர் மூவீஸ்
எஸ்ஆர்எம் பச்சமுத்துவின் வேந்தர் மூவீஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. முதல் முறையாக மலையாளத்தில் வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் படம் இது.

கதை
கிரிக்கெட் விளையாடும் போது நான்கு நண்பர்களில் ஒருவருக்கு தலையில் பந்துவிழுந்து நினைவுகளை இழக்கிறார். அடுத்த நாள் அவருக்கு திருமணம். அவர் நினைவிழந்தது தெரியாமல் நண்பர்கள் சமாளித்து, அவரை தாலி கட்ட வைப்பதை அத்தனை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

புஸ்தகம்லோ கொன்னி பேஜிலு மிஸ்ஸிங்
இந்தப் படத்தின் ஸ்பெஷலே விஜய் சேதுபதிதான். ஏற்கெனவே தெலுங்கில் புஸ்தகம்லோ கொன்னி பேஜிலு மிஸ்ஸிங் என்ற பெயரில் புதுமுகங்களை வைத்து எடுத்தார்கள். சுமாரான வெற்றி கிடைத்தது.

கெடுக்காம எடுப்பாங்களா
பார்க்கலாம்... மலையாளத்திலாவது இதை கெடுக்காமல் எடுக்கிறார்களா என்று!


Click it and Unblock the Notifications











