நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்திருக்கும் தண்டேல்.. படம் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம்
ஹைதராபாத்: தெலுங்கில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கும் நாக சைதன்யா தற்போது தண்டேல் படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். படத்தினை சந்து மொன்டெட்டி என்பவர் இயக்கியிருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இன்று படம் வெளியாகியிருக்கிறது. இந்தச் சூழலில் படம் குறித்து ட்விட்டர் வாசிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை இதில் பார்க்கலாம்.
நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா தெலுங்கில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். முதலில் சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிறகு பிரிந்தார்கள். சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலித்தார் சைதன்யா. அவர்களது காதலுக்கும் நாகார்ஜுனாவின் குடும்பம் ஒத்துக்கொண்டதால் இரண்டு பேருக்கும் கடந்த வருடம்தான் ஹைதராபாத்தில் வைத்து திருமணம் பிரமாண்டமாக நடந்தது.

நாக சைதன்யா படங்கள்: நாக சைதன்யாவை பொறுத்தவரை பெரிய ஹிட்டுகளோ, படுதோல்விகளோ கொடுக்காமல் தனது கரியரை சரியாகவும், நிதானமாகவும் டோலிவுட்டில் கொண்டு செல்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தண்டேல் படத்துக்கு முன்னதாக நடித்திருந்த கஸ்டடி படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஏனெனில் அதனை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். தமிழில் அவர் நல்ல ஹிட்டுகளை கொடுத்த இயக்குநர் என்பதால் தெலுங்கிலும் தனக்கு கொடுப்பார் என்று சைதன்யா நம்பினார்.
தோல்விதான்: ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக நடந்தது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது பெரிய வரவேற்பை எதுவும் கொடுக்கவில்லை. ஸ்க்ரீன் பிளே, கதை என எதிலுமே புதிது இல்லை என்று சொல்லி படத்தை ஒதுக்கினார்கள். அந்தப் படத்துக்கு பிறகு தூதா என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். அந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் சைதன்யாவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வெற்றியை கொடுத்தது. இதனால் அவரும் மகிழ்ச்சியடைந்தார்.
தண்டேல் ரிலீஸ்: தூதாவுக்கு பிறகு தண்டேல் படத்தில் நடித்திருக்கிறார் அவர். இதனை சித்து மொன்டெட்டி இயக்க; தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். படமானது இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியிருக்கிறது. தன்னுடைய இரண்டாவது திருமணத்துக்கு பிறகு வெளியாகும் முதல் படம் தண்டேல் என்பதால்; இதனை நாக சைதன்யா ரொம்பவே சென்ட்டிமென்ட்டான ஒன்றாக பார்த்தார். படத்துக்கு பெரும்பாலும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸே கிடைத்திருக்கிறது.
ட்விட்டர் விமர்சனம்: படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சாய் பல்லவி Rocked The Show.. முதல் பாதியில் அருமை என்று குறிப்பிட்டு சாய் பல்லவியை பாராட்டியிருக்கிறார்.

அதேபோல் இன்னொரு ரசிகரோ, 'நாக சைதன்யாவின் பெர்ஃபார்மன்ஸ் அருமை. நாக சைதன்யாவுக்கு இது ப்ளாக் பஸ்டர்தான். படத்தில் இருக்கும் காதல் கதை மிக அருமையாக இருக்கிறது. பாடல்களும், சண்டை காட்சிகளும், தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் பட்டையை கிளப்புகின்றன" என்று புகழ்ந்திருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து இந்த ரசிகர், ப்ளாக் பஸ்டர் கொடுத்திருக்கும் நாக சைதன்யாவுக்கும், தண்டேல் பட டீமுக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இன்னொருவரோ, சாய் பல்லவி மிக அற்புதமாக நடித்திருக்கிறார். முதல் பாதி சூப்பர்.காதல் காட்சிகள் அவ்வளவு எமோஷனாக வந்திருக்கின்றன. திரையரங்கில் மிகச்சிறந்த அனுபவம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்திருக்கும் தண்டேல் படத்துக்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே வருவதால் படக்குழுவும் உச்சக்கட்ட ஹேப்பியில் இருக்கிறது.



Click it and Unblock the Notifications











