விவாகரத்துக்கு பிறகு முதல் முறை? நாக சைத்தன்யா, சமந்தா ஒரே மேடையில்.. எக்ஸ் ஜோடிகளின் சந்திப்பு!
சென்னை: நடிகர் நாக சைத்தன்யா மற்றும் அவரது முன்னாள் மனைவி சமந்தா ரூத் பிரபு ஒரே திருமண விழாவில் தங்களது புதிய வாழ்க்கை துணைகளுடன் கலந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.தற்போது இணையத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.
திருமண நிகழ்ச்சி: ஹைதராபாத்தில் தொழிலதிபர் சுனில் நாரங்கின் மகள் சிம்ரன் திருமண விழாவில், நாக சைதன்யா தனது மனைவி சோபிதா துலிபாலா உடன் கலந்து கொண்டார். அதே நிகழ்வில் சமந்தா தனது கணவர் ராஜ் நிடிமோரு உடன் வருகை தந்தார். இருவரும் தனித்தனியாக தங்களது துணைகளுடன் திருமண விழாவில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியானது. சமந்தா மஜென்டா நிற சேலையில் எளிமையான தோற்றத்தில் கணவர் ராஜ் நிடிமோருயின் கைகளை இணைத்தபடி நடந்து வந்தார. மறுபுறம், நாக சைதன்யா நீல நிற பிளேசரிலும், சோபிதா துலிபாலா நீல நிற சேலையில் அழகாக இருந்தார்.

புதிய வாழ்க்கை துணை: நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் 'ஏ மாயா சேசாவே' படத்தில் சேர்ந்து நடித்த போது காதலித்தனர். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் 2017ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் நாக சைதன்யா 2024ஆம் ஆண்டு நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். அதே போல சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டார். இருவரும் புதிய வாழ்க்கை துணையுடன் ஒரே திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.
நடிகர் நாக சைதன்யா தற்போது கார்த்திக் வர்மா டாண்டு இயக்கத்தில் உருவாகும் Vrushakarma படத்தில் டிரஷர் ஹண்டராக நடிக்க உள்ளார். இப்படத்தில் மீனாக்ஷி சௌதரி மற்றும் ஸ்பர்ஷ் ஸ்ரிவஸ்தவா ஆகியோர் கமிட்டாகி உள்ளனர். அதே போல சமந்தா
'Maa Inti Bangaram' என்ற ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் 2026 மே 15ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications