பிரதமருடன் நாக சைதன்யா தம்பதி சந்திப்பு.. தஞ்சாவூர் பொம்மையை பரிசாக கொடுத்த மோடி!

சென்னை: நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடித்த தண்டேல் திரைப்படம் தியேட்டரில் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், நடிகர் நாகார்ஜுனா தனது குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, அவருக்கு அக்கினேனி நாகேஸ்வர ராவின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை பரிசாக வழங்கினார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நாகார்ஜுன் தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து நாகேஸ்வர ராவ் பற்றிய புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளனர்.. அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி நாக சைதன்யா மற்றும் அவரது மனைவி சோபிதா துலிபாலா தம்பதிக்கு தஞ்சாவூர் பொம்மையை பரிசாக அளித்துள்ளார். இந்த சந்திப்பில், அப்பா நாகார்ஜுனா மற்றும் அம்மா அமலா அக்கினேனி ஆகியோரும் உடன் இருந்தனர்.

naga chaitanya pm

சினிமாவின் பொக்கிஷம்: இந்த போட்டோவை நடிகை சோபிதா துலிபாலா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து,பாராளுமன்ற கட்டிடத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடிஜியை சந்தித்து பேசினோம். .அக்கினேனி நாகேஸ்வர ராவின் சினிமா பாரம்பரியத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பத்ம பூஷன் விருது பெற்ற டாக்டர் யார்லகடா லட்சுமி பிரசாத் அவர்களின் 'அக்கினேனி கா விராட் வ்யக்தித்வா'வை வழங்குவது ஒரு மரியாதை.

naga chaitanya pm

அவரது வாழ்க்கைப் பணிக்கான உங்கள் அங்கீகாரம் எங்கள் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் இந்தியத் திரைப்பட ஆர்வலர்களுக்கும் ஒரு பொக்கிஷமாகும் என பதிவிட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

naga chaitanya pm

தண்டேல்: நடிகர் நாகசைத்தன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி நாக சைதன்யா இரண்டாவதாக நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் முதல் முறையாக அவரது நடிப்பில் தண்டேல் படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டும் ரூ.10 கோடி வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது.

naga chaitanya pm

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X