மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!

மும்பை: நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்து வருவதாக சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் டீகோட் செய்து வருகின்றனர். சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த 2021ம் ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு கொண்டு வந்து பிரிந்தனர்.

விவாகரத்து செய்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், இதுவரை இருவரும் வேறு யாரையும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. ஆனால், நடிகை சமந்தா - விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார் என குஷி படத்தின் சமயத்தில் ரூமர்கள் கிளம்பின.

Naga Chaitanya and Sobhita Dhulipala again facing secret dating talks in social media

அதே போல தொடர்ந்து நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன.

விவாகரத்தில் முடிந்த காதல் திருமணம்: விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேசாவே படத்தின் மூலம் 2010ம் ஆண்டு இருவரும் இணைந்து நடித்தனர். தொடர்ந்து சில ஆண்டுகள் ரகசிய டேட்டிங் செய்து வந்த இருவரும் ஒரு கட்டத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்தினர். பின்னர் 2017ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். பெற்றோர்கள் சம்மதத்தில் நடந்த இந்த திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. திருமணமாகி இருவரும் காதல் பறவைகளாக வாழ்ந்து வந்தாலும், குழந்தையை பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், 2017ம் ஆண்டு அதிரடியாக விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

Naga Chaitanya and Sobhita Dhulipala again facing secret dating talks in social media

சோபிதாவுடன் டேட்டிங்: 31 வயதாகும் நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக கடந்த 3 ஆண்டுகளாக கிசுகிசுக்கள் கிளம்பி வரும் நிலையில், இப்பவும் அப்படியொரு விஷயம் வெடித்துள்ளது. மகாராஷ்ட்ராவில் ஒரு இடத்துக்கு இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்றுள்ளதாக ரசிகர்கள் கண்டு பிடித்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா பாணி?: அடிக்கடி ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய தேவரகொண்டா ஒரே இடத்துக்கு சென்றுள்ளனர். ஒன்றாக பேங்காக்கில் சுற்றுலா செய்து வருகின்றனர் என்றெல்லாம் ரசிகர்கள் போட்டோக்களை மேட்ச் செய்து கண்டுபிடித்ததை போலவே தற்போது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் ஒரே இடத்தில் தான் டூர் அடித்து வருவதாக உறுதியாக கூறுகின்றனர்.

Naga Chaitanya and Sobhita Dhulipala again facing secret dating talks in social media

போஸ்ட்டுக்கு லைக்: மேலும், சோபிதா துலிபாலாவின் போஸ்ட்டுக்கு உடனடியாக நாக சைதன்யா லைக் போட்டதையும் பார்த்து ஷாக்கான ரசிகர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்களா என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கடைசி வரை இப்படியே ரகசியமாக டேட்டிங் மட்டுமே செய்யப் போகின்றனரா என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மங்கி மேன் என்னாச்சு?: ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோ தேவ் படேல் நடிப்பில் உருவாகி உள்ள மங்கி மேன் படத்தில் சோபிதா துலிபாலா ஜோடியாக நடித்துள்ளார். அந்த படம் வெளிநாடுகளில் வெளியான நிலையில், இன்னமும் இந்தியாவில் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை என்கின்றனர். முன்னதாக தேவ் படேலுடன் தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்த நிலையில், சோபிதா துலிபாலாவும் அப்படி நடித்துள்ளாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X