2வது திருமணத்தையும் இப்படி பண்ணனும்.. நாக சைதன்யா தாலி கட்டும் வீடியோவை ஷேர் செய்த சோபிதா.. என்ன விசேஷம்!
ஹைதராபாத்: நடிகை சமந்தா கடந்த டிசம்பர் 1ம் தேதி இயக்குநர் ராஜ் நிடிமோருவை 2வதாக திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், நடிகை சோபிதா துலிபாலா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சமந்தாவுக்கு போட்டியாக சோபிதா துலிபாலா இந்த வீடியோவை வெளியிடவில்லை. நாக சைதன்யாவை அவர் திருமணம் செய்து அதற்குள் ஓராண்டு ஆகிவிட்டது. அதை கொண்டாடும் விதமாகவே தனது திருமண வீடியோவை சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், நாக சைதன்யா இல்லாமல், தனது வாழ்க்கை முழுமை பெற்றிருக்காது என்றும் அவர் பேசும் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
காலம் மாறிப்போச்சு: காதலித்து திருமணம் செய்யும் சினிமா பிரபலங்கள் எல்லாம் கடைசி வரை மனைவியை பிரியாமலும் கணவரை பிரியாமலும் வாழ்ந்த காலமெல்லாம் மாறி விட்டது. தற்போது கணவர் ஒரு பக்கம் இன்னொரு நடிகையை காதலிப்பது, மனைவி இன்னொரு பக்கம் நடிக்கச் சென்ற இடத்தில் புதிய காதலை தேடுவது என்கிற அளவுக்கு மாறிவிட்டது என டோலிவுட்டில் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக சமந்தா மற்றும் நாக சைதன்யா பற்றிய விவாதங்களை சோஷியல் மீடியாவில் நடத்தி வருகின்றனர்.
நாக சைதன்யா போஸ்ட்: சமந்தாவுக்கு திருமணம் ஆன அதே நாளில் தனது தூதா வெப்சீரிஸ் வந்து ஒரு வருடம் ஆகிறது என நடிகர் நாக சைதன்யா போஸ்ட் போட்டிருந்தார். இந்நிலையில், தற்போது நடிகை சோபிதா துலிபாலா ஒரு வருட திருமண வாழ்க்கை சந்தோஷமாக செல்வதாக தனது திருமண வீடியோவையே ஷேர் செய்துள்ளார்.
ஒரு வருஷம் ஆகிடுச்சு: நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் பிடித்த மாதமே டிசம்பர் மாதம் தான் போல. கடந்த டிசம்பர் 4ம் தேதி தான் நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவை திருமணம் செய்தார். இந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி சமந்தா - ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துள்ளார். நாக சைதன்யா மற்றும் சமந்தா திருமணம் செய்ததும் டிசம்பர் மாதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாக சைதன்யாவை சோபிதா திருமணம் செய்து ஒரு வருடம் ஆகிவிட்ட சந்தோஷத்தை கொண்டாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications