சமந்தாவுடன் நியூயார்க்கில் ஹனிமூன்.. நாக சைதன்யா இப்போ சோபிதாவுடன் எங்கே செல்கிறார் தெரியுமா?

ஹைதராபாத்: நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் 4ம் தேதி இரவு 8.15 மணிக்கு தாலி கட்டி திருமணம் செய்தார். தாத்தா நாகேஸ்வர ராவின் ஆசியோடு அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

திருமணம் முடிந்து கோயிலுக்கும் சென்று மணமக்கள் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் ஹனிமூனுக்கு எங்கே செல்லப் போகின்றனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

naga chaitanya sobhita dhulipala honeymoon

இந்நிலையில், ஏற்கனவே நடிகை சோபிதா துலிபாலா ஹனிமூன் செல்ல வேண்டும் என்றால் இந்த இடத்துக்குத்தான் செல்வேன் என பேட்டி ஒன்றில் கூறிய இடத்தைக் குறிப்பிட்டு நாக சைதன்யா கண்டிப்பாக தனது 2வது மனைவியான சோபிதாவை அவர் விரும்பிய இடத்துக்கே ஹனிமூனுக்கு அழைத்துச் செல்வார் எனக் கூறி வருகின்றனர்.

naga chaitanya sobhita dhulipala honeymoon

சமந்தாவுடன் நியூயார்க்கில் ஹனிமூன்: நடிகர் நாக சைதன்யாவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஜோடி போட்டு நடித்து சினிமாவில் அறிமுகமான சமந்தா தனது முதல் பட ஹீரோவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக கடந்த 2017ம் ஆண்டு அவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணம் முடித்த கையோடு இருவரும் நியூயார்க் நகரத்துக்கு ஹனிமூனுக்காக சென்றனர். சந்தோஷமாக சமந்தாவும் நாக சைதன்யாவும் சாய்சாம் ஆக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட பிளவு காரணமாக 2021ல் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

naga chaitanya sobhita dhulipala honeymoon

சோபிதா துலிபாலாவுடன் தேனிலவு எங்கே?: நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா கடந்த டிசம்பர் 4ம் தேதி நடைபெற்ற நிலையில், இருவரும் ஹனிமூனுக்கு எங்கே செல்லப் போகின்றனர் என்கிற கேள்வி எழுந்துள்ளது. நடிகை சோபிதா துலிபாலா அளித்த த்ரோபேக் பேட்டியில், தன்னிடம் கனிவு காட்டும் நபர் தனக்கு கணவராக வரவேண்டும் என்று பேசியுள்ளார். அதே போல ஹனிமூனுக்கு ஐஸ்லாந்துக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசையையும் சோபிதா வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், சோபிதா விருப்பப்பட்ட இடத்துக்குத்தான் நாக சைதன்யா அவரை ஹனிமூனுக்கு அழைத்துச் செல்வார் என்றும் இருவரும் சீக்கிரமே குழந்தை பெற்றுக் கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

naga chaitanya sobhita dhulipala honeymoon

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X