Naga Chaitanya: நாக சைதன்யா சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் இன்று?.. டோலிவுட் பரபரப்பு!

ஹைதராபாத்: நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் இன்று நடைபெறவுள்ளதாக டோலிவுட்டில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி வந்த நிலையில், தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா அப்பாவை போலவே 2வது திருமணம் செய்துக் கொள்ள தயாராகி விட்டாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். சமூக வலைதளங்கள் முழுவதுமே சமந்தா ரசிகர்கள் நாக சைதன்யாவை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Naga Chaitanya and Sobhita Dhulipala going to engage today

சோபிதா துலிபாலாவுடன் ஏற்பட்ட நெருக்கம் தான் நாக சைதன்யா சமந்தாவை பிரிவதற்கு உண்மையான காரணமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

நாக சைதன்யா நிச்சயதார்த்தம்: ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் இன்று நடிகர் நாக சைதன்யாவுக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக டோலிவுட்டில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் நிச்சயம் செய்துக் கொண்ட தகவல் கசிந்த நிலையில், அதன் பின்னர் இருவரும் அதனை ஒப்புக் கொண்டனர்.

சோபிதாவுடன் டேட்டிங்: கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் சென்று வந்தார் என ஏகப்பட்ட போட்டோ ஆதாரங்களுடன் சோஷியல் மீடியாவில் பல விஷயங்கள் பூகம்பங்களாக கிளம்பின. இருவரும் ஒரே இடத்துக்கு சுற்றுலா சென்ற தனித் தனி போட்டோக்களும் வெளியாகின. மேலும், வெளிநாட்டில் ஒரு மியூசியத்தில் இருவரும் இருக்கும் புகைப்படமும் வெளியாகி அவர்களின் காதலை வெளிச்சப்படுத்தியது.

சமந்தாவுடன் விவாகரத்து: நடிகை சமந்தா அறிமுகமான ஹே மாய சேசாவே (விண்ணைத்தாண்டி வருவாயா) படத்தில் இணைந்து நடித்த நாக சைதன்யா அவரை உருகி உருகி காதலித்து வந்த நிலையில் இருவரும் 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால், திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து சமந்தா நடித்து வந்த நிலையில், ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. 2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

குழந்தை இல்லை: நாக சைதன்யா மற்றும் சமந்தா தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை. அதுவும் ஒரு காரணமாக இருவரது பிரிவுக்கும் சொல்லப்பட்டது. இந்நிலையில், சோபிதா துலிபாலாவை நடிகர் நாக சைதன்யா நிச்சயம் செய்துக் கொள்ளப் போவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இதுதொடர்பாக இருவரும் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயதார்த்தத்துக்கு பிறகாவது அறிவிப்பார்களா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X