இனிமே திருட்டுத்தனம் தேவையில்லை.. புது செல்ஃபி புள்ள சோபிதா.. நாக சைதன்யாவின் வேறமாறி போஸ்!

ஹைதராபாத்: நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா சில ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், சில பல காரணங்கள் காரணமாக சமந்தாவை பிரிந்து விவாகரத்து பெற்று விட்டார். பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நாக சைதன்யா ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி லயன்ஸ்கேட் திறக்கப்படும் அபூர்வ நாள் என ஜோதிடர்கள் எல்லாம் சொன்ன நிலையில், அந்த நல்ல நாளிலேயே நிச்சயம் செய்து விடலாம் என சோபிதா துலிபாலாவை நிச்சயம் செய்துக் கொண்டார்.

naga chaitanya sobhita dhulipala samantha

இந்நிலையில், தற்போது லிஃப்ட் ஒன்றில் இருவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை நடிகர் நாக சைதன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தைரியமாக வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

தனியாக வாழும் சமந்தா: நாக சைதன்யாவை சமந்தா பிரிய காரணமே அவர் வேறு ஒரு நடிகரை காதலித்து வருகிறார் என்றும் குழந்தை பிறக்காதது தான் காரணம் என்றும் ராஜ் மற்றும் டிகேவின் தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் படு ஆபாசமாக நடித்தது தான் காரணம் என்றும் ஏகப்பட்ட கதைகள் சொல்லப்பட்டு வந்தன. ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சமந்தா தனியாகவே வாழ்ந்து சினிமா வாய்ப்புகளையும் வெப்சீரிஸ் வாய்ப்புகளையும் கைப்பற்றி நடித்து வருகிறார். இதுவரை அவரது டேட்டிங் போட்டோக்களோ அல்லது அடுத்து யாரை திருமணம் செய்யப் போகிறேன் என்றோ எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

புது செல்ஃபி புள்ள சோபிதா: கத்தி படத்தில் செல்ஃபி புள்ளையாக இருந்த சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து செய்த நாக சைதன்யா தற்போது லேட்டஸ்ட் செல்ஃபி புள்ளையாக மாறி நிற்கும் சோபிதா துலிபாலா செல்ஃபி எடுக்க தாறுமாறாக போஸ் கொடுத்து சமந்தா ரசிகர்களை வெறுப்பேற்றி உள்ளார்.

திருமணம் எப்போது?: ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சோபிதா துலிபாலா கைவசம் சில படங்களை வைத்திருக்கும் நிலையில், அதையெல்லாம் முடித்து விட்டு அடுத்த ஆண்டு தான் திருமணம் செய்துக் கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X