நாக சைதன்யா - சோபிதா திருமணம் எங்கு நடைபெறுகிறது தெரியுமா? டிரெண்டாகும் திருமண அழைப்பிதழ்!

சென்னை:தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா, இவர், 2009 ஆம் ஆண்டு வெளியான. 'ஜோஷ்’ திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். தற்போது டாப் ஹீரோவாக இருக்கும் இவர் சமந்தாவை விவாகரத்து செய்த நிலையில், நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய உள்ளார்.தற்போது இவர்களின் திருமண பத்திரிக்கை இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பழம்பெரும் நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் மகனான நாகார்ஜுனா தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகராக இருக்கிறார். இவர், இரண்டாவதாக நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே,தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கிறார்கள். இவரின் மூத்த மகனான நாக சைத்தன்யா, நடிகை சமந்தா 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

naga chaitanya sobhita dhulipala

நாக சைத்தன்யா, சமந்தா: இதையடுத்து, இவர்கள் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து இருவரும் விவாரத்து செய்யப்போவதாக தகவல் பரவியது. இதையடுத்து, நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் இருந்து, நாகசைத்தன்யாவுடன் இருந்த அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்தார் இதையடுத்து இருவரும் 2021ம் ஆண்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர். இவர்கள் பிரிவுக்கான பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில் இருவரும் பிரிவு குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவிலலை

naga chaitanya sobhita dhulipala

நிச்சயதார்த்தம்: இதையடுத்து நாக சைதன்யாவுக்கு மறுமணம் செய்து கொள்ள அவரது பெற்றோர் விரும்பியதை அடுத்து, நாக சைதன்யா – சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதை நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்திருந்தார். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் பலரும் நாக சைத்தன்யாவிற்கும் சோபிதாவுக்கு வாழ்த்துக்கள் பரவின.

திருமணம் எங்கு தெரியுமா: இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் எனஅனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இவர்களின் திருமண பத்திரிக்கை ஒன்று இணையத்தில் வெளியாக உள்ளது. அதன்படி இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் 4ந் தேதி ஹைதராபாத்தில் உள்ள அண்ணாபூர்ணா ஸ்டியோவில் நடைபெற் உள்ளது. தற்போது இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X