Naga Chaitanya Marriage Time: நாக சைதன்யா சோபிதாவுக்கு எத்தனை மணிக்கு தாலி கட்டப்போறாரு தெரியுமா?
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் டிசம்பர் 4ம் தேதியான இன்று இரவு நடைபெறுகிறது. அதிகாலையில் தாலி கட்டும் காலம் எல்லாம் தற்போது மாறி மாலை நேரத்து திருமணங்களாக மாறி வருகின்றன.
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நாக சைதன்யா அவரை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், மீண்டும் சினிமா நடிகையான சோபிதா துலிபாலாவை காதலித்து இன்று திருமணம் செய்யக் காத்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் என சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா வீடு திருமணக் கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், எத்தனை மணிக்கு நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணம் நடைபெற போகிறது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
தந்தையை இழந்த சமந்தா: நடிகர் நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியான சமந்தா தனது தந்தை ஜோசப் பிரபுவை சில தினங்களுக்கு முன்பு இழந்த நிலையில், சோகத்தில் மூழ்கியுள்ளார். மேலும், தனது காதல் கணவர் விவாகரத்து செய்து பிரிந்ததில் இருந்தே சமந்தாவுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல்கள் அவரை மேலும், பாதித்துள்ளதாக கூறுகின்றனர்.
திருமணம் எங்கே நடக்கிறது?: நாகார்ஜுனாவின் குடும்பத்துக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோவில் தான் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இன்று நடைபெற உள்ளது. காலை முதலே திருமணத்துக்கான ஏற்பாடுகள் பீவர்லி ஹில்ஸில் உள்ள அந்த ஸ்டூடியோவில் களைகட்டத் தொடங்கியுள்ளது. ராஜமெளலி, சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பிரபாஸ், ராம் சரண், ராணா டகுபதி என ஏகப்பட்ட டோலிவுட் பிரபலங்கள் திருமண விழாவில் பங்கேற்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புஷ்பா 2 ஃபீவர்: இன்று இரவு 9 மணிக்கு தெலங்கானாவில் புஷ்பா 2 படத்திற்கான ஸ்பெஷல் ப்ரீமியர் காட்சி திரையிடப்படுகிறது. டோலிவுட்டில் புஷ்பா 2 ஃபீவர் ஒரு பக்கமும் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் ஒரு பக்கமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
திருமண நேரம்: நாக சைதன்யாவின் 2வது திருமணம் டிசம்பர் 4ம் தேதியான இன்று இரவு 8.15 மணிக்கு நடைபெறவுள்ளதாக தற்போது லேட்டஸ்ட் அப்டேட்கள் கிடைத்துள்ளன. மணப்பெண்ணும் மணமகனும் திருமணத்துக்காக ரெடியாகி வருவதாகவும் ஏகப்பட்ட சடங்குகள் முன்னதாக களைகட்டி வருவதாக கூறுகின்றனர். திருமண முகூர்த்தம் இன்று இரவு 8.15 மணிக்கு என்பதால், திருமண புகைப்படங்கள் 9 மணிக்கு மேல் சோஷியல் மீடியாவை திக்குமுக்காட செய்யும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











