For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நடிகையுடன் வெளிநாட்டில் டேரா போட்ட நாகசைதன்யா..சமந்தாவை நினைத்து புலம்பும் ஃபேன்ஸ்!

  |

  சென்னை : நடிகர் நாகசைதன்யா வெளிநாட்டில் பிரபல நடிகையுடன் டேட்டிங் சென்றுள்ள புகைப்படம் வெளியாகி இணையத்தை திணறடித்து வருகிறது.

  காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா, சமந்தா இருவரும் இன்ஸ்டாவில் கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட்டு விட்டு பிரிந்தனர்.

  நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இவர்களின் பிரிவுக்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி மன வேதனை அடைந்தனர். இவர்கள் விரைவில் ஒன்று சேர்ந்து விட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்த போதும், தற்போது வரை இருவரும் பிரிந்தே இருக்கின்றனர்.

  பிறந்தநாள் கொண்டாடும் நாகசைதன்யா… மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் ஆன சமந்தா… பதறிய ரசிகர்கள்பிறந்தநாள் கொண்டாடும் நாகசைதன்யா… மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் ஆன சமந்தா… பதறிய ரசிகர்கள்

  கவனத்தை ஈர்த்த சமந்தா

  கவனத்தை ஈர்த்த சமந்தா

  திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வந்த சமந்தா விவாகரத்துக்கு பிறகு, புயல் வேகத்தோடு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த புஷ்பா திரைப்படத்தில் ஓர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உலகளவில் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் விழவைத்தார்.

  தெறிக்கவிட்ட யசோதா

  தெறிக்கவிட்ட யசோதா

  இதையடுத்து, தமிழில் விஜய்சேபதி,நயன்தாராவுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்தார். இந்த பாடமும் ஹிட்டடித்தது. இப்படத்தில் நயன்தாராவைவிட சமந்தா பெஸ்டாக நடித்திருந்தார். கடந்த வாரம் சமந்தா நடிப்பில் யசோதா வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. வாடகை தாய் மூலம் நடக்கும் முறைகேடு மற்றும் மோசடிகள் குறித்து இப்படத்தில் மிகவும் சுவாரஸ்யமாக கூறப்பட்டுள்ளது.

  கண்கலங்கிய சமந்தா

  கண்கலங்கிய சமந்தா

  யசோதா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, தனக்கு ஏற்பட்டுள்ள மாயோசிட்டிஸ் என்ற பிரச்சனை குறித்து மனம் திறந்து ரசிகர்களிடம் கண்கலங்கி பேசினார். அதில், என் வாழ்க்கையில் சில நாட்கள் நல்லதாக இருந்தன. சில நாட்கள் கெட்டதாக அமைந்தன. ஆனால் பல துன்பங்களைத் தாண்டி இவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டேன் என நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது. விரைவில் குணமடைந்து விடும் என மருத்துவர்கள் கூறுவதாக தெரிவித்து இருந்தார்.

  ஆறுதல் கூறிய ரசிகர்கள்

  ஆறுதல் கூறிய ரசிகர்கள்

  இந்த பேட்டியின் போது சமந்தா, ஆளே மாறிப்போய், கண்ணாடி அணிந்து கொண்டு மிகவும் சோர்வாக காணப்பட்டதால் அவருடைய ரசிகர்கள் மனவேதனை அடைந்தனர். அவர் விரைவில் பூரண குணம் அடைய வேண்டும் என இணையத்தில் பல ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு ஆறுதல் கூறி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

  வெறும் வதந்தி

  வெறும் வதந்தி

  சமந்தா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்த நாக சைதன்யா அவரை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை இது குறித்து சமந்தாவோ சமந்தாவின் மேனேஜரோ எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதால் இது வெறும் ஒரு வதந்தியாகவே உள்ளது.

  வெளிநாட்டில் டேட்டிங்

  வெளிநாட்டில் டேட்டிங்

  இந்நிலையில், நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலிபாலாவுடன் வெளிநாட்டில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பேசுபொருள் ஆகி உள்ளது. சமந்தாவை பிரிந்த நிலையில் நாக சைதன்யா சோபிதா உடன் டேட்டிங் செய்து வருவதாக டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது இருவரும் வெளிநாட்டில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி அதை உறுதிப்படுத்தி உள்ளது.

  இப்படி செய்யலாமா?

  இப்படி செய்யலாமா?

  இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் சமந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு மனவேதனையில் இருக்கும் நிலையில் நீங்கள் இப்படி செய்வது நியாயமா என நாகசைதன்யாவை கேள்வி கேட்டு வருகின்றனர். மேட் இன் ஹெவன் என்ற வெப் சீரிஸ் மூலம் பிரபலமான சோபிதா துலிபாலா, ராமன் ராகவ் 2.0, காலகண்டி, செஃப், தி பாடி மற்றும் கோஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானார். பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

  English summary
  Naga Chaitanya was previously married to superstar Samantha Ruth Prabhu. Naga Chaitanya And Sobhita Dhulipala's Dating Rumours.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X