நாளை நாக சைதன்யா-சோபிதா துலிபாலா திருமணம்.. களைகட்டும் ஹைதராபாத்..காலையில் முகூர்த்தம்!

சென்னை: தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான நாகார்ஜூனுவின் மகன் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் நாளை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் படுஜோராக நடந்த வருகின்றன. இந்த திருமணத்தில் யார் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யா, 'ஜோஷ்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது டாப் ஹீரோவாக இருக்கும் இவர் சமந்தாவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு சமந்தாவும் நாக சைத்தன்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இவர்கள் பிரிவுக்கான பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்ட போதும், தனிப்பட்ட முறையில் நாக சைத்தன்யாவோ, சமந்தாவோ பிரிவுக்கான காரணம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

naga chaitanya sobhita dhulipala naga chaitanya sobhita dhulipala

நாளை திருமணம்: இதையடுத்து, நாக சைதன்யாவும் சோபிதாவும் காதலித்து வருவதாகவும், இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும் செய்திகள் வெளியான நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் நிச்சய தார்த்தம் நடைபெற்றது. அந்த போட்டோக்ளை நாகர்ஜூனா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து, இவர்களின் திருமணம் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அண்ணாபூர்ணா ஸ்டியோவில் இவர்களில் திருமணம் நடைபெற உள்ளது.

எட்டு மணி நேர சடங்கு: இந்த திருமணத்திற்கு சோபிதா பாரம்பரிய கலாச்சார உடையான காஞ்சிவரம் பட்டு புடவையை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளை காதி சேலையையும் தேர்வு செய்து வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல, நாக சைதன்யாவிற்கும் பாரம்பரிய உடையை அணியை இருக்கிறார். மேலும், தெலுங்கு முறைப்படி திருமணம் காலை முகூர்த்த நேரத்தில் தொடங்கி எட்டு மணி நேர சங்குகளுடன் நடக்க இருக்கிறது.

இந்த திருமணத்தில் சிறப்பு விருந்தினராக பிரபாஸ், எஸ்.எஸ்.ராஜமௌலி, நடிகர் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல நடிகர் நடிகர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதால், ஒட்டுமொத்த மீடியாவின் பார்வையும் ஹைதராபாத் மீது உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X