Naga Chaitanya Wedding: களைகட்டும் திருமண விழா.. நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் எப்போ?

ஹைதராபாத்: நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யப் போகிறார். சமீபத்தில், திருமண சடங்குகள் நடைபெற்ற புகைப்படங்களை நடிகை சோபிதா துலிபாலா பதிவிட்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

நாக சைதன்யா நடிப்பில் வரும் சங்கராந்திக்கு தண்டேல் திரைப்படம் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தில் நடித்த சாய் பல்லவி தான் அந்த படத்தில் ஹீரோயின். தீபாவளி மற்றும் பொங்கல் என பேக் டு பேக் ரசிகர்களை குஷியில் ஆழ்த்த போகிறார் சாய் பல்லவி.

naga chaitanya sobhita dhulipala wedding

கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி லயன்ஸ் கேட் திறப்பு தினம் எனக் கூறப்பட்ட நாளில் நடிகர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், இருவரும் கூடிய சீக்கிரமே திருமணம் செய்துக் கொள்ளப் போகின்றனர். எப்போது அவர்களின் திருமணம் நடைபெற போகிறது என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

naga chaitanya sobhita dhulipala wedding

மணமகள் ரெடி: மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா நடித்த பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் ஷோபிதா துலிபாலா. துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான க்ரூப் படத்திலும் இவர் தான் ஹீரோயின். நைட் மேனேஜர் வெப்சீரிஸ் மூலமாகவும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த சோபிதா துலிபாலா பட்டுப்புடவை கட்டி மணக்கோலத்தில் திருமணத்துக்கு ரெடியாகி விட்டதை சமீபத்தில் போட்டோக்கள் மூலமாக அறிவித்தார்.

naga chaitanya sobhita dhulipala wedding

தீபாவளி நிகழ்ச்சி: சமீபத்தில் மும்பையில் முன்னணி பாலிவுட் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்ற தீபாவளி நிகழ்ச்சியில் நடிகை சோபிதா துலிபாலா அழகான சேலையை உடுத்திக் கொண்டு செம க்யூட்டாக கலந்துக் கொண்டார். நாக சைதன்யாவை நிச்சயம் செய்ததில் இருந்தே உடை கட்டுப்பாடு வந்து விட்டதா என்கிற விமர்சனங்களும் சோபிதாவை சுற்றி வலம் வருகின்றன.

naga chaitanya sobhita dhulipala wedding

திருமணம் எப்போ?: இந்த ஆண்டு ஏகப்பட்ட பிரபலங்களுக்கு திருமணம் நடைபெற்றது. பல நடிகைகளுக்கு குழந்தையும் பிறந்துள்ளன. இந்நிலையில், அடுத்த நட்சத்திர ஜோடி திருமணமாக நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற காத்திருக்கிறது. திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக இரு வீட்டார் மத்தியிலும் தொடங்கியுள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக ராஜா வீட்டுத் திருமணம் போல நடைபெறப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. டிசம்பர் முதல் வாரத்திலேயே திருமணத்தை நடத்தப்போவதாகவும் கூறுகின்றனர்.

naga chaitanya sobhita dhulipala wedding

அரண்மனையில் திருமணம்: ஆலியா பட், தீபிகா படுகோன், காஜல் அகர்வால், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்களின் திருமணங்கள் சமீப காலமாக ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பழம்பெரும் பிரம்மாண்ட அரண்மனைகளில் நடைபெற்று வரும் நிலையில், நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணமும் அரண்மனையில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. நாக சைதன்யா தண்டேல் படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்கியுள்ளார்.

naga chaitanya sobhita dhulipala wedding

சோபிதாவின் ஆசை: டிசம்பர் மாதம் முழுக்க ஏகப்பட்ட திருமண விழாக்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வசந்த காலத்தில் திருமணத்தை நடத்த வேண்டும் என்கிற முடிவில் தான் டிசம்பர் மாதத்தை சோபிதா தேர்வு செய்துள்ளதாக கூறுகின்றனர். சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்த நிலையில், இதற்கு முன்னதாக திருமணம் செய்யாத சோபிதா தன்னுடைய திருமணம் கிராண்டாக நடைபெற வேண்டும் என்றும் ஆசைப்படுவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.

naga chaitanya sobhita dhulipala wedding

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X