நாக சைதன்யா - சோபிதா திருமண தேதி எப்போ தெரியுமா?.. ஏற்பாடுகள் தடல் புடல்.. நாகார்ஜுனா உற்சாகம்
ஹைதராபாத்: சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்ட சூழலில் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். அதற்கு பிறகு இருவரும் தங்களது பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் சூழலில் சைதன்யா இப்போது சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார். சமீபத்தில்கூட நாக சைதன்யாவும், சோபிதாவும் தீபாவளியை இணைந்து கொண்டாடினார்கள். இந்தச் சூழலில் அவர்களது திருமண தேதி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
நாக சைதன்யா தெலுங்கு திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது சமந்தாவை காதலிக்க ஆரம்பித்தார். அவர்களது காதல் திருமணம்வரை செல்வதற்கு முதலில் நாகார்ஜுனாவின் குடும்பம் ஒத்துக்கொள்ளவில்லை என்றும்; பிறகு சைதன்யா பிடித்த அடத்தால் சமந்தாவுடனான திருமணத்துக்கு குடும்பத்தினர் ஒத்துக்கொண்டார்கள். அவர்களது திருமணம் கோவாவில் நடந்தது.

பிரிவு: திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை நாக சைதன்யா - சமந்தாவிடையே அடிக்கடி சில வாக்குவாதங்கள் வர ஆரம்பித்தன. அந்த வாக்குவாதங்கள் இரண்டு பேருக்குமிடையே இருந்த உறவில் சிறிது சிறிதாக விரிசலை ஏற்படுத்த ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் அந்த விரிசல் பிரிவில் வந்து முடிந்தது. இரண்டு பேரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். காதலித்து திருமணம் செய்தும் விவாகரத்தா என்று ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தனர்.
நாக சைதன்யா - சோபிதா துலிபாலா: சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்க ஆரம்பித்தார். சோபிதா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானமாதேவி கேரக்டரில் நடித்தவர். சைதன்யாவும், சோபிதாவும் தொடர்ந்து சில காலம் டேட்டிங் செய்தார்கள். பிறகு இருவரது காதலும் வீட்டுக்கு தெரியவந்ததை அடுத்து உடனடியாக நாக சைதன்யா தரப்பிலிருந்து க்ரீன் சிக்னல் காட்டப்பட்டது. உடனடியாக இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
தீபாவளி கொண்டாட்டம்: நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அதன்படி சமீபத்தில் நடந்த ஏஎன்ஆர் விருது வழங்கும் விழாவிலும் இருவரும் கலந்துகொண்டார்கள். அதேபோல் தீபாவளியையும் இணைந்து கொண்டாடினார்கள். அதனைப் பார்த்த ரசிகர்கள் இப்போதே தலை தீபாவளி கொண்டாட்டத்துக்கான ஒத்திகையை அவர்கள் எடுத்துக்கொண்டார்களோ என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தார்கள்.
திருமண தேதி: சூழல் இப்படி இருக்க அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் அவர்களது திருமணம் குறித்த தகவல் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி ராஜஸ்தானில் திருமணம் நடக்கும் என்று முதலில் கூறப்பட்ட சூழலில்; இப்போது நாகார்ஜுனாவுக்கு சொந்தமான ஸ்டூடியோவில் ஹைதராபாத்தில் நடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் டிசம்பர் மாதம் நான்காம் தேதி திருமணம் நடக்கும் என்றும்; அதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஏற்பாடுகள் தடல் புடல்: மேலும் தனது மகனின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் நாகார்ஜுனா அதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்தே உற்சாகத்தோடு ஆரம்பித்திருக்கிறாராம். முன்னதாக ராஜஸ்தானில் நடப்பதைவிடவும் ஹைதராபாத்தில் நடந்தால்தான் ஆந்திரா மற்றும் தெலங்கானாவை சேர்ந்த முக்கியஸ்தர்கள் வருவதற்கு வசதியாக இருக்குமென நாகார்ஜுனா சொன்னதாகவும் அதற்கு சோபிதா ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











