திருமணம் முடிந்த பின் முதல் விசேஷம்.. நாக சைதன்யா - சோபிதா துலிபாலா முகத்தில் சந்தோஷத்தை பாருங்க

ஹைதராபாத்: நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களது திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். நாக சைதன்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். ஏற்கனவே அவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றார். இந்தச் சூழலில் சைதன்யாவும், சோபிதாவும் அனுராக் காஷ்யப்பின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. அவரும் சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இணைந்து நடித்தார்கள். அப்போது அவர்களுக்குள் மலர்ந்த காதல் 2017ஆம் ஆண்டு கோவாவில் திருமணத்தில் முடிந்தது. அதற்கு பிறகு சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். காதலித்து திருமணம் செய்த பிறகும் விவாகரத்து நடந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

naga chaitanya sobitha dhulipala

என்ன காரணம்?: திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடித்ததுதான் அந்த விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மை காரணம் இல்லை; சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் காரணம்; விவாகரத்துக்கு பிறகு 100 கோடி ரூபாய்வரை ஜீவனாம்சம் கொடுக்க நாக சைதன்யா குடும்பம் முன் வந்ததாகவும்; அதனை சமந்தா பெற்றுக்கொள்வதற்கு மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. சைதன்யாவை பிரிந்த அவர் இப்போதுவரை சிங்கிளாக இருந்துவருகிறார்.

சோபிதாவுடன் காதல்: ஆனால் நாக சைதன்யாவோ நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். அனுராக் காஷ்யப் இயக்கத்தில் அறிமுகமான சோபிதா துலிபாலா தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து ஃபேமஸ் ஆனவர். அவரும் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் எனது குறிப்பிடத்தக்கது. நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் இடையே உருவான காதலுக்கு நாகார்ஜுனா தனது முழு சம்மதத்தை தெரிவித்து திருமணத்துக்கும் ஒத்துக்கொண்டார்.

கோலாகல திருமணம்: அதன்படி நிச்சயதார்த்தத்தை சிம்பிளாக முடித்துவிட்டு; ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் சைதன்யா - சோபிதா திருமணம் கோலாகலமாக நடந்தது. அந்த ஸ்டூடியோவில் இருக்கும் நாகேஸ்வர ராவின் சிலைக்கு முன்பு இரண்டு பேருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. பிரமாண்டமாக நடந்த அந்தத் திருமணத்தில் திரையுலகினரும், குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார்கள்.

முதல் விசேஷம்: திருமணம் முடிந்த கையோடு இரண்டு பேரும் ஸ்ரீசைலம் கோயிலுக்கு ஜோடியாக சென்று சாமி தரிசனம் செய்தார்கள். இந்நிலையில் இருவரும் திருமண நிகழ்விலும் கலந்துகொண்டிருக்கின்றார்கள். அதாவது பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப்பின் மகளான ஆலியா காஷ்யப் ஷேன் கிரிகோயர் என்பவரை காதலித்துவந்தார். அவர்களது காதல் திருமணம் நேற்று மும்பையில் நடந்தது. இதில்தான் சைதன்யாவும், சோபிதாவும் ஜோடியாக கலந்துகொண்டார்கள்.

இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டபோது நாக சைதன்யா கருப்பு நிற கோட்டும், சோபிதா துலிபாலா லைட் ப்ரவுன் நிற சுடிதாரும் அணிந்திருந்தனர். இரண்டு பேரும் அவ்வளவு மகிழ்ச்சியோடும், காதலோடும் அந்தத் திருமணத்துக்கு வந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகிவருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X