விரைவில் திருமணம்.. சோபிதாவுக்காக கால் கடுக்க காத்திருந்த நாக சைதன்யா.. ட்ரெண்டாகும் வீடியோ
ஹைதராபாத்: நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா சமந்தாவுடனான விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலித்தார். அவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் நடந்தது. விரைவில் அவர்களது திருமணம் ராஜஸ்தானில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர்கள் இருவர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. ஏராளமான ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவர் முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து பெற்று; பிறகு நடிகை அமலாவை திருமணம் செய்துகொண்டார். அவரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் நாக சைதன்யா. அவரும் தெலுங்கு சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக தண்டெல் என்ற படம் வெளியாகிறது.

சமந்தாவுடன் திருமணம்: இதற்கிடையே தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தாவுடன் தெலுங்கில் நடித்தபோது அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து தனது நடிப்பில் பிஸியாக வலம் வந்துகொண்டிருந்தார். அவர் நடிப்பதற்கு சைதன்யாவும் முழு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் திருமணத்துக்கு பிறகும் எதற்காக நடிப்பு என்பது நாக சைதன்யாவின் குடும்ப எண்ண ஓட்டமாக இருந்தது என்று கூறப்படுகிறது.
பிரிந்த சைதன்யா - சமந்தா: ஒருகட்டத்தில் குடும்பத்தினரின் நெருக்கடி தாங்க முடியாமல் சமந்தாவின் இனி நடிக்க வேண்டாம் என்று நாக சைதன்யா சொன்னதாகவும்; அதன் காரணமாக இருவருக்கும் ஆரம்பித்த விரிசல் பிறகு பிளவாகி இப்போது பிரிந்துவிட்டார்கள். அவர்களது பிரிவு டோலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. பிரிவுக்கு பிறகு சைதன்யாவின் குடும்பம் கொடுத்த நூறு கோடி ரூபாய்க்கும் மேலான பணத்தை சாம் வேண்டாமென்று சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.
நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்: சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்துவந்தார் நாக சைதன்யா. சோபிதாவும் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சைதன்யாவின் காதலுக்கு நாகார்ஜுனா க்ரீன் சிக்னல் கொடுத்த பிறகு; அவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் மிக சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. இருவரின் திருமணமும் விரைவில் ராஜஸ்தானில் நடக்கலாம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
சந்தித்துக்கொண்ட இருவர்: இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் பொதுவெளியில் முதன்முதலாக சந்தித்துக்கொண்ட வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. ஹைதராபாத்தில் ஏஎன்ஆர் விருது விழா நேற்று நடந்தது. அதில் சிரஞ்சீவி விருது பெற்றார். அதனை அமிதாப் பச்சன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த சோபிதாவும், நாக சைதன்யாவும் சந்தித்துக்கொண்டனர். சோபிதா வரும்வரை விழா நடந்த அரங்கத்தின் வெளியே காத்திருந்த சைதன்யா; சோபிதா வந்த பிறகு அவருடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு அவரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். சோபிதா பச்சை நிற புடவையில் வந்திருந்தார்.
கண்டிஷன் போட்ட சோபிதா?: இதற்கிடையே கடந்த சில நாட்களாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது, திருமணத்துக்கு பிறகு நாக சைதன்யாவின் வீட்டிலேயே செட்டில் ஆனால்; எங்கே சமந்தாவுக்கு வந்த நிலைமை தனக்கும் வந்துவிடுமோ என்று சோபிதா அஞ்சுவதாகவும்; எனவே தனி குடுத்தனம் சென்றுவிட வேண்டும் என்று நாக சைதன்யாவுக்கு கண்டிஷன் போட்டிருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











