எவ்வளவுதான் மறைப்பது?.. உறுதியான நாக சைதன்யா - சோபிதா காதல்?.. எங்கெல்லாம் போயிருக்காங்க தெரியுமா?
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யாவும் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொண்ட அவர்; சில வருடங்களுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்தார். சூழல் இப்படி இருக்க நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இன்று அவர்களுக்கு நிச்சயதார்த்தம் என்றும் பேசப்படுகிறது.
தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய குடும்பங்களில் ஒன்று நாகார்ஜுனா. அவர் நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனாவை போலவே அவரது மகன் நாக சைதன்யாவும் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். 2009ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான நாக சைதன்யா கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் தண்டெல் படம் வெளியாகவிருக்கிறது.

திருமணம்: இதற்கிடையே விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது சமந்தாவை காதலிக்க ஆரம்பித்தார் சைதன்யா. அவர்களது காதலுக்கு இருவீட்டாரின் சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் கோவாவில் திருமணம் செய்துகொண்டனர். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தெலுங்கு தேசத்தில் பெரிய வீட்டு மருமகளாக மாறினார்.
தொடர்ந்து சினிமாவில்: திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு நாக சைதன்யாவும் முழு சப்போர்ட்டாக இருந்தார். அதேசமயம் சமந்தா சினிமாவில் நடிப்பதை நாகார்ஜுனாவும், அமலாவும் விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடியது. இருந்தாலும் சமந்தா முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்திக்கொண்டே இருந்தார்.

பிரிவு: நிலைமை இப்படி இருக்க கடந்த 2021ஆம் ஆண்டு நாக சைதன்யாவும் - சமந்தாவும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். அதற்கு காரணம் சமந்தா நடித்ததுதான் என்று இன்றளவும் பேச்சு இருக்கிறது. ஆனால் சைதன்யாவோ, சமந்தாவோ அதற்கான காரணத்தை வெளியே சொல்லவில்லை. விவாகரத்துக்கு பிறகும் சமந்தாவின் கரியர் பீக்கில்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அதிலிருந்து இப்போது மீண்டிருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கிறார்.
நாக காதல்: இருவரும் பிரிந்த பிறகு அவரவர்கள் தங்களது பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். அதேசமயம் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்த சோபிதா துலிபாலாவை காதலித்துவருவதாக பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அதனை இரு தரப்பும் ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை.

வெளியான புகைப்படங்கள்: இந்நிலையில் நாக சைதன்யாவும், சோபிதாவும் வெளிநாட்டில் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஒரு புகைப்படத்தில் இருவரும் லண்டனில் இருக்கும் ஒரு இந்திய ரெஸ்டாரண்ட்டில் இருக்கின்றனர். அதேபோல் இன்னொரு புகைப்படத்தில் நாக சைதன்யா இருக்கும் இடமும், சோபிதா இருக்கும் இடமும் ஒரே மாதிரி இருக்கின்றன. அந்தப் புகைப்படங்களை இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர். இதனையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் எவ்வளவதான் சைதன்யா மறைப்பிங்க என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இதற்கிடையே இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











