காதல் மனைவிக்கு கேக் செய்த ஹீரோ.. சமந்தாவின் பிரார்த்தனை எதற்காக? #HappyBirthdaySamantha

சென்னை: தென்னிந்திய திரையுலகை கலக்கி வரும் நடிகை சமந்தாவின் 33வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Samantha 32nd Birthday Celebration | Lock Down Birthday, ChaySam

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.

செல்ஃபி புள்ளையாகவும், சூப்பர் டீலக்ஸ் வேம்பாகவும் தனது மாறுபட்ட நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ள சமந்தாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பல ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே

ஹேப்பி பர்த்டே

1987ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி கேரளாவின் ஆழப்புலாவில் பிறந்தவர் சமந்தா. ஆனால், படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னை பல்லாவரத்தில் தான். ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்த சமந்தா, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் காமர்ஸ் டிகிரியை நிறைவு செய்தார்.

சினிமா அறிமுகம்

சினிமா அறிமுகம்

கடந்த 2010ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அறிமுகமானார் சமந்தா. தமிழில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சமந்தா, தெலுங்கில் நாக சைதன்யாவுடன் ஹே மாய சேசாவே எனும் அந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் ஹீரோயினாக அறிமுகமானார்.

பிடித்த நடிகர்

பிடித்த நடிகர்

தமிழில் நடிகை சமந்தாவுக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்றால் அது தளபதி விஜய் தான். சமந்தாவின் கரியரில் கத்தி, தெறி, மெர்சல் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். கத்தியில் வரும் செல்ஃபி புள்ள பாடல், தெறியில் வரும் என் ஜீவன் மற்றும் மெர்சலில் வரும் ரோஸ் மில்க் காட்சி தளபதி ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

கோலிவுட், டோலிவுட் என ஒரே சமயத்தில் இரு மொழிகளிலும் கலக்கி வந்த நடிகை சமந்தா, முதன் முதலாக நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து ஆட்டோ நகர் சூர்யா, மஜிலி உள்ளிட்ட படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார். சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கேக் செய்த ஹீரோ

கேக் செய்த ஹீரோ

லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இருப்பதால், நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டிலேயே சின்னதாக ஸ்பெஷல் கேக் ஒன்றை சமந்தாவின் கணவரும் டோலிவுட் நடிகருமான நாக சைதன்யா செய்து அசத்தியுள்ளார். காதல் மனைவிக்காக இப்படியொரு சூப்பர் கேக்கை சமைத்துள்ள நாக சைதன்யாவை பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

சமந்தா பிரார்த்தனை

சமந்தா பிரார்த்தனை

ஆனால், கேக் கட் செய்து கணவருக்கு ஊட்டும் புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடாமல், கேக்கை பார்த்து பிரார்த்தனை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கேக் நல்லா இருக்கணும்னு வேண்டுறீங்களா என்றும், கொரோனா போகணும் அடுத்த வருஷம் பெரிய கேக் வெட்டணும்னு வேண்டுறீங்களா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பல ஹாஷ்டேக்குகள்

பல ஹாஷ்டேக்குகள்

நடிகை சமந்தாவின் 33வது பிறந்த நாளை கோலிவுட் ரசிகர்கள், டோலிவுட் ரசிகர்கள் என இருவரும் போட்டி போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். #HappyBirthdaySamantha, #HBDsamantha, #SamanthaAkkineni என பல ஹாஷ்டேக்குகளை உருவாக்கி, சமந்தாவின் போட்டோ கலெக்‌ஷன், அவர் நடித்த படத்தின் காட்சிகள் என சமந்தா மயமாகவே சமூக வலைதளங்களை மாற்றியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X