For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திருமணத்திற்கு முன் இளம் பெண்ணுடன் காரில்.. போலீசில் வசமாக சிக்கிய நாகசைத்தன்யா!

  |

  ஆந்திரா: திருமணத்திற்கு முன் இளம் பெண் ஒருவருடன் காரில் இருந்த போது போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டதை நடிகர் நாகசைத்தன்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜூனின் மகனான நாகசைத்தன்யா தெலுங்கில் முக்கிய நடிகராக திகழ்ந்து வருகிறார். விண்னைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சமந்தாவுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நாகசைத்தன்யா, நடிகை சமந்தாவை கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார்.

  சமந்தா ஒரு மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், அனைவரும் பொறாமை படும்படி, குடும்பத்தை நடத்தி வந்தார். யார் கண் பட்டதோ நாகசைத்தன்யாவும் சமந்தாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

  சென்னைக்கு ஐ லவ் யூ சொன்ன பாலிவுட் நடிகை: அப்படியே அந்த ரசம் சாதத்துக்கும் ஒரு மிஸ் யூ போடுங்க சென்னைக்கு ஐ லவ் யூ சொன்ன பாலிவுட் நடிகை: அப்படியே அந்த ரசம் சாதத்துக்கும் ஒரு மிஸ் யூ போடுங்க

  பிரிந்தனர்

  பிரிந்தனர்

  இவர்களின் பிரிவிற்கு உண்மையான காரணம் தெரியாமல் சமந்தாவை குறை கூறும் விதமாகவே பல்வேறு வதந்திகள் பரவியது. சமந்தா சுயநலவாதி, கர்ப்பத்தை கலைத்தார், குழந்தை பெற்று தர மறுத்தார், வேறு ஒருவருடன் நெருங்கிய உறவில் இருந்தார் என்பது போல் சிலர் சமூக வலைத்தளத்தில் கொளுத்தி போட அதுவும் நெருப்பாக பற்றி எரிந்தது.

  லால் சிங் சத்தா

  லால் சிங் சத்தா

  ஹிந்தியில் ஆமிர் கான் நடிப்பில் வெளியாகி உள்ள லால் சிங் சத்தா திரைப்படத்தில் நாகசைத்தன்யா நடித்துள்ளார். நடிகர் அமீர்கானின் நண்பனாக, ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாகசைத்தன்யா இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

  இப்படியா கேள்வி கேட்பது

  இப்படியா கேள்வி கேட்பது

  இந்நிலையில், லால் சிங் சத்தா திரைப்படம் குறித்து பேட்டி அளித்த நாகசைத்தன்யா, பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டோர். அப்போது, செய்தியாளர், நான் ஒருமுறை ரயில் நிலையத்தில் தனது காதலியை முத்தமிட்டபோது அங்கிருந்த காவலர்களிடம் மாட்டிக்கொண்டேன் அதுபோன்று போலீசில் மாட்டிக்கொண்ட சம்பவம் ஏதாவது நடந்து இருக்கா என்று கேட்டார். இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த நாகசைத்தன்யா, "எனக்கும் அதுதான் நடந்தது" என்றார்.

  போலீசில் வசமாக சிக்கினேன்

  போலீசில் வசமாக சிக்கினேன்

  ஹைதராபாத்தில் காரின் பின் இருக்கையில் என் பெண் தோழி அமர்ந்து இருந்தார். அந்த நேரம் தான் போலீசிடம் வசமாக மாட்டிக்கொண்டேன். அந்த நேரம் பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது. இதற்கு அப்புறம் சொல்வதற்கு எதுவும் இல்லை, அந்த காருக்குள் என்ன நடந்தது, எதனால் நான் பிடிபட்டேன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும் என்று சிரித்தபடி பதிலளித்தார்.

  Recommended Video

  Naga Chaitanya Love | மீண்டும் காதலில் விழுகிறார் நாக சைதன்யா..
  பெண் ரசிகைகளின் ஆதரவு தேவை

  பெண் ரசிகைகளின் ஆதரவு தேவை

  மேலும், சமந்தாவுடனான விவாகரத்துக்கு பிறகு, உங்கள் மீது பெண்களின் கவனம் அதிகரித்துள்ளதா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சைத்தன்யா, பெண்களின் கவனம் எப்பொழுதும் என் மீது இருக்கிறது. நல்ல முறையில் அதை வைத்திருப்பது எப்போதும் நல்லது என்றார். அது மட்டுமில்லால் பெண் ரசிகைகளின் ஆதரவு ஒரு நடிகனுக்கு உத்வேகத்தை அளிக்கும் என பதிலளித்தார்.

  English summary
  In a recent interview, Laal Singh Chaddha actor Naga Chaitanya confessed to getting caught with a girl once. He also opened up about the female attention post his divorce from Samantha Ruth Prabhu.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X