சமந்தாவை மானசீகமாக நேசிக்கும் நாகசைத்தன்யா… இந்த ஒரு ஆதாரம் போதாதா?

சென்னை : விவகாரத்து முடிவுக்கு பின்னும் காதல் மனைவி சமந்தாவை மானசீகமாக நேசித்து வருகிறார் நாகசைத்தன்யா.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைத்தன்யாவும், அவரது காதல் மனைவியும் நடிகையுமான சமந்தாவும் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர்.

பிரிவதாக மட்டுமே அறிவித்த இந்த ஜோடி, பிரிவுக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக உள்ளனர்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

சமந்தா மற்றும் நாசசைத்தன்யா இருவரும் சுமார் 7 வருடம் உருகி உருகி காதலித்து 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவாவில் இந்து முறைப்படியும் கிறிஸ்துவ முறைப்படியும் நடைபெற்றது. அனைத்து திரைப்பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சமந்தா திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பல வதந்திகள்

பல வதந்திகள்

சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இருவரும் பிரிவதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், திடீரென ஒரு நாள் பிரிவதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவுக்கு காரணம் தெரியாததால், பல யூகங்கள் கிளம்பியது. குறிப்பாக சமந்தா தனது ஒப்பனையாளர் ப்ரீத்தம் என்பவருடன் நெருங்கி பழகி வருவதுதான் காரணம் என்றும், நடிப்பின் மீது மட்டுமே ஆர்வம் காட்டி வருவதால் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும், கருக்கலைப்புகள் செய்ததாகவும் கூறப்பட்டது.

Unfollow செய்த சமந்தா

Unfollow செய்த சமந்தா

இப்படி பல வதந்திகள் பரவினாலும் இருவரும் இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தனர். சமீபத்தில் சமந்தா திருமண புடவையை நாகசைத்தன்யாவின் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாகசைத்தன்யாவை சமந்தா unfollow செய்துள்ளார். சமந்தாவின் இந்த செயலால் ரசிகர்கள் அவர் மீது எரிச்சலடைந்தனர்.

நல்ல குணம்

நல்ல குணம்

சமந்தா unfollow செய்த பிறகும் நாக சைத்தன்யா அவரை unfollow செய்யவில்லை. அதே போல அவரின் குடும்ப உறுப்பினர்களான நாகார்ஜூன், அமலா மற்றும் அகில் ஆகியோரும் சமந்தாவை பாஃலோ செய்தே வருகின்றனர். இதனால், நாகசைத்தன்யாவின் நல்ல குணத்தை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இணையத்தில் பல புரளிகள் வந்த போது கூட அவரோ அவரது குடும்பமோ சமந்தாவை ஒரு வார்த்தைக்கூட தவறாக பேசவில்லை, மேலும் நாகசைத்தன்யா சமந்தாவை மானசீகமாக தற்போதும் நேசித்து வருகிறார் என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் போதாதா? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X