Don't Miss!
- News
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக "பர்கர், சாண்ட்விச்" தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பிரபல நடிகையுடன் டேட்டிங் செல்லும் நாக சைதன்யா...மீண்டும் காதலில் விழுந்தாரா ?
ஐதராபாத் : நடிகர் நாக சைதன்யா, பிரபல நடிகை ஒருவருடன் டேட்டிங் செல்வதாக பல உறுதியான தகவல்கள் கன்ஃபார்ம் செய்து வருகின்றன. இதனால் அவர் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
சமந்தாவை பிரிந்த பிறகு தனியாக வாழ்ந்து வந்த நாக சைதன்யா, இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக உடனடியாக தகவல்கள் பரவின. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்த அவர், தற்போதைக்கு திருமணம் பற்றி யோசிக்கும் ஐடியா தனக்கு கிடையாது என சொன்னார்.
இதனால் நாக சைதன்யா பக்கம் மீடியாக்களின் கவனம் போகவில்லை. கணவரை பிரிந்த பிறகு சமந்தா நடத்திய கிளாமர் போட்டோஷுட், ஓவர் கிளாமருக்கு மாறியது, சோஷியல் மீடியாவில் அவர் போடும் போஸ்டுகளில் கவனம் செலுத்த துவங்கி விட்டனர்.
பகத்
பாசில்
கேரக்டருக்கு
ரீப்ளேஸ்மெண்ட்டே
கிடையாது..
இயக்குனர்
ரத்னகுமார்!

சமந்தா - நாக சைதன்யா பிரிவு
2017 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தாவும், நாக சைதன்யாவும் 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாங்கள் பிரிவதாக சோஷியல் மீடியாவில் அறிவித்தனர். இது கோடிக்கணக்கான ரசிகர்களை வேதனையடைய வைத்தது. இவரின் பிரிவிற்கு என்ன காரணம் என பல வதந்திகள் பரவியது. இவற்றை கடந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

சமதான முயற்சிகள் தோல்வி
இவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இவர்களை சேர்த்து வைக்க இரு குடும்பத்தினரும் தீவிர முயற்சி செய்ததாக கூறப்பட்டது. குறிப்பாக மாமனார் நாகர்ஜுனா, இருவரிடமும் சமாதானம் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இருவருமே தங்களின் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்து விட்டதாக கூறப்பட்டது.

சமந்தா மீது பாசம்
பிரிவை அறிவித்தாலும் சமந்தாவின் சந்தோஷத்திற்கு முக்கியம் தருவதாகவே பல பேட்டிகளில் நாக சைதன்யா குறிப்பிட்டார். சமந்தா பற்றி அக்கறையாக பல கருத்துக்களை பகிர்ந்தார்.

நடிகையுடன் டேட்டிங்கா
இந்த சமயத்தில் நடிகை சோபிதா துலிபலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் சென்று வருவதை பலரும் கவனித்துள்ளனர். இருவரும் மிக நெருக்கமாக பழகி வருவதால், நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

வீட்டை சுற்றி காட்டிய நாக சைதன்யா
நாக சைதன்யா தற்போது ஐதராபாத்தில் ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கி உள்ளார். இந்த வீடு தற்போது தான் கட்டப்பட்டு வருகிறது. நாக சைதன்யாவும், சோபிதாவும் இந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று, அதிக நேரம் ஒன்றாக செலவிட்டு வருகிறார்களாம். வீடு முழுவதையும் சோபிதாவிற்கு சுற்றி காட்டிய நாக சைதன்யா, சோபிதா இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

ஓட்டலுக்கு வேறு போனாரா
அது மட்டுமல்ல தான் கடைசியாக நடித்த மேஜர் படத்தின் ப்ரொமோஷனுக்காக சோபிதா தங்கி இருந்த ஓட்டலுக்கு நாக சைதன்யா பலமுறை வந்து சென்றுள்ளார். ஐதராபாத்தில் சோபிதாவின் பிறந்தநாளை இருவரும் மிக நெருக்கமாக, உற்சாகமாக கொண்டாடி உள்ளனர்.

இது காதலா? நட்பா?
தனது தனிப்பட்ட வாழ்க்கையை மீடியாக்களிடம் இருந்து விலக்கி வைக்கும் நடிகர்களில் நாக சைதன்யாவும் ஒருவர். அப்படிப்பட்டவர் தற்போது பல இடங்களுக்கும் சோபிதாவுடன் சென்று வருவது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. சமந்தாவிடம் இருந்து பிரிந்த பிறகு சோபிதா மீது காதலில் விழுந்துள்ளாரா அல்லது சாதாரண ஃபிரண்டாக சோபிதாவின் கம்பெனியை அவர் விரும்புகிறாரா என்றும் பலர் கேட்டு வருகின்றனர்.