நாக சைத்தன்யா கண்ணியமானவர்.. சமந்தாவை பத்தி சொல்லனும்னா.. சோபிதா என்னென்ன சொல்லி இருக்காங்க பாருங்க
தெலுங்கு சினிமாவின் மிகவும் முக்கியமான நடிகர் நாகர்ஜுனா. இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரது மகன் நாக சைத்தன்யாவும் நடிகர். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதாவது 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாக சைதன்யா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பல கோடிகள் தொகையையும் சமந்தா வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு, விவாகரத்து கொடுத்தார்.
இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நாக சைத்தன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகையான சோபிதா துலிபாலாவுடன் கடந்த சில ஆண்டுகளாக டேட் செய்து வந்ததாக கூறப்பட்டு வந்தது. இது குறித்து ஊடகங்கள் தரப்பில் இருந்து கேள்வி கேட்கப்பட்டபோதும் கூட, இருவரும் மறுப்பு தெரிவிக்காமல், வெறுமனே புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்து நழுவி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதாவது ஆக்ஸ்ட் 8ஆம் தேதி காலையில் இருந்து அனைத்து ஊடகங்களிலும் நாக சைத்தன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் நிச்யதார்த்தம் என தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இதனை உறுதிப் படுத்தும் விதமாக, நாகர்ஜுனா தனது சமூக வலைதளப் பக்கத்தில், நிச்யதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து இருவரையும் வாழ்த்தியுள்ளார். இந்நிலையில் யார் இந்த சோபிதா துலிபாலா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.

சமந்தா: இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் சோபிதா துலிபாலா வெப் தொடர்களிலும் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான வெப் தொடரானா நைட் மேனேஜர் வெப் தொடரின் இரண்டாம் பாகம் ரிலீஸின் போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சமந்தா குறித்தும், நாக சைத்தன்யா குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், சமந்தாவின் திரை வாழ்க்கையைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களாக உள்ளது. இதுதான் அவரது வளர்ச்சிக்கு காரணம் என்றார்.

கண்ணியமானவர்: அதேபோல் நாக சைத்தன்யா குறித்து கேட்கப்பட்டதற்கு, " தலைக்கணம் இல்லாத, மிகவும் ஜாலியான நடிகர் எனவும் மிகவும் கண்ணியமானவர் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றது. மேலும் அந்த பேட்டியில், பிரபாஸ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் குறித்து கேட்கப்பட்டது. இந்த பேட்டி கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது.
எல்லையற்ற அன்பு: சோபிதா துலிபாலாவுக்கும் நாக சைத்தன்யாவுக்கும் இன்றைக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்றைய தினமான ஆகஸ்ட் 8 என்பது சமந்தா நாக சைத்தன்யாவிடம் தனது காதலைச் சொன்ன நாள் என கூறப்படுகின்றது. இது குறித்த செய்திகளும் இணையத்தில் உலா வருகின்றது.மேலும் இன்றை தினத்தைக் குறிப்பிட்டு நாகர்ஜுனா தனது வாழ்த்துப் பதிவில் எல்லையற்ற அன்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











