Sobhita: முதலில் தங்கச்சி சமந்தா.. அப்பறம் அக்கா சோபிதா.. இவங்க கல்யாண கதை உங்களுக்கு தெரியுமா?
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் மிகவும் முக்கியமான நடிகர் நாகர்ஜுனா. இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரது மகன் நாக சைத்தன்யாவும் நடிகர். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதாவது 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாக சைதன்யா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பல கோடிகள் தொகையையும் சமந்தா வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு, விவாகரத்து கொடுத்தார்.
இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நாக சைத்தன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகையான சோபிதா துலிபாலாவுடன் கடந்த சில ஆண்டுகளாக டேட் செய்து வந்ததாக கூறப்பட்டு வந்தது. இது குறித்து ஊடகங்கள் தரப்பில் இருந்து கேள்வி கேட்கப்பட்டபோதும் கூட, இருவரும் மறுப்பு தெரிவிக்காமல், வெறுமனே புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்து நழுவி வந்தனர்.

ஆனால் இன்றைய தினம் இணையத்திற்குள் நுழைந்தாலே நாக சைத்தன்யா மற்றும் சோபிதா துலிபாலாவுக்கு நிச்சயதார்த்தம் என்ற செய்திகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த நிச்சயதார்த்தம் மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டு நடப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாகர்ஜுனா தெரிவிப்பார் எனவும் கூறப்பட்டது.

நிச்சயதார்த்தம்: அதேபோல், நாக சைத்தன்யாவின் தந்தையும் நடிகருமான நாகர்ஜுனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்தது எனக் கூறி புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்துகளைக் கூறினார். இந்நிலையில், சோபிதா துலிபாலா நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னர், மாடலாக இருந்து இந்தியாவின் திரை உலகினரின் கவனத்தைப் பெற்றார்.

திரை வாழ்க்கை: 2013ஆம் ஆண்டு சோபிதா ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்று அசத்தினார். அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சோபிதா தற்போது, மிகவும் பிசியான நடிகையாக மாறியுள்ளார். இவருக்கு இன்று நிச்சயதார்த்தம் முடிந்திருந்த தகவல் அறிந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமந்தா: சோபிதா வீட்டில் மூத்த பெண். இவருக்கு தங்கை உள்ளார். அவரது பெயர் சமந்தா. சமந்தா ஒரு மருத்துவர். இவருக்கு கடந்த ஆண்டே திருமணம் நடந்தது. தனது தங்கையின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை சோபிதாவின் தங்கை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. தனது தங்கை சமந்தா துலிபாலாவுக்கு திருமணம் நடந்து ஒரு ஆண்டுக்குப் பின்னர் சோபிதா துலிபாலாவுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











