Naga Chaitanya Salary - கஸ்டடி வசூல் 5 கோடிதான்.. நாக சைதன்யா சம்பளம் இவ்வளவா?.. லேட்டஸ்ட் அப்டேட் இதோ
சென்னை: Naga Chaitanya Salary (நாக சைதன்யா சம்பளம்) கஸ்டடி திரைப்படத்துக்காக நாக சைதன்யா வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கிவைத்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. அவர் இயக்கிய மாநாடு படம் டைம் லூப் கான்செப்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தாலும் அதில் வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும், ஸ்க்ரீன் ப்ளேவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் காரணமாக படம் நூறு கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

வெங்கட் பிரபுவின் கஸ்டடி: மாநாடு படத்துக்கு பிறகு நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கியிருக்கிறார். தமிழ் - தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகியிருக்கும் படத்தில் கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார், ராம்கி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 90களில் நடைபெறும் காவல் துறை சப்ஜெக்ட்டாக உருவாகியிருக்கும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்திருக்கின்றனர்.
கஸ்டடி ரிலீஸ்: வெங்கட் பிரபுவின் படம் என்பதாலும், நாக சைதன்யாவுக்கு முதல் நேரடி தமிழ் படம் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்போடு நேற்று திரையரங்குகளில் வெளியானது கஸ்டடி. ரசிகர்கள் ஆர்வமாக படம் பார்க்க சென்றனர்.ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற கருத்தே எழுந்திருக்கிறது. படத்துக்கு நல்ல ஒன்லைனாக இருந்தாலும் மேக்கிங்கில் சொதப்பிவிட்டார் மனோபாலா என ரசிகர்கள் கூறுகின்றனர்.

வசூலில் டல்: அதுமட்டுமின்றி முதல் நாள் வசூலும் படக்குழு எதிர்பார்த்தபடி இல்லையாம். முதல் நாளான நேற்று மொத்தமே 3 கோடி ரூபாய்தான் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இன்று விடுமுறை என்பதால் வசூல் அதிகரிக்கும் என படக்குழு எதிர்பார்த்திருந்தது. ஆனால் இன்றும் வசூலில் டல்லடிக்க இதுவரை கஸ்டடி படமானது மொத்தம் ஐந்து கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறதாம். இதனால் படக்குழு கொஞ்சம் அப்செட் என்று தெரிகிறது.
நாக சைதன்யா சம்பளம்: இந்நிலையில் கஸ்டடி படத்துக்காக நாக சைதன்யா பெற்றிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்காக அவர் பத்து கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறாராம். கஸ்டடி படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் அதன் மூலம் தமிழில் பெரும் ரவுண்டு வரலாம் என கணக்குப்போட்டிருந்த நாக சைதன்யாவுக்கு கஸ்டடி ரிசல்ட் பெரும் அடியை கொடுத்திருப்பதாகவே கருதப்படுகிறது.

நெகட்டிவுக்கு காரணம் என்ன?: முன்னதாக, மாநாடு படத்தை இயக்கியிருந்த வெங்கட் பிரபு அதில் திரைக்கதை மூலம் ஒரு மேஜிக்கை நிகழ்த்தியிருந்தார். ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தி அதை ரசிகர்கள்க்கு போர் அடிக்காத வகையில் காட்சிப்படுத்தியிருந்தார். ஆனால் கஸ்டடியில் தனது திரைக்கதையில் ரொம்பவே கோட்டை விட்டுவிட்டார். அதுதான் படத்தின் நெகட்டிவுக்கு முதல் காரணம் என படத்தை பார்த்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











