நாக சைதன்யா, ஹூமா குரேஷி.. வலிமை தெலுங்கு மற்றும் இந்தி போஸ்டர்களை வெளியிட்ட பிரபலங்கள்!
சென்னை: இந்த முறை ரிலீஸ் மிஸ் ஆகாது என வலிமையுடன் வருகிறார் நடிகர் அஜித்.
கொரோனா மற்றும் அதன் அப்கிரேட் வெர்ஷனான ஒமிக்ரான் அதிகரித்து வரும் நிலையிலும், வலிமை ரிலீஸ் பின் வாங்காது என தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் மிரட்ட வருகிறது வலிமை. தற்போது டோலிவுட் நடிகர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் வலிமை படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

பின் வாங்கிய ராஜமெளலி
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் தியேட்டர்கள் பல மாநிலங்களில் முடங்கி வரும் சூழலில் ஜனவரி 7ம் தேதி வெளியாகவிருந்த ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது. கொரோனா மட்டும் காரணமில்லை என்றும் ஆந்திராவில் அதிரடியாக திரையரங்குகள் மூடப்பட்டதும் டிக்கெட் விலை குறைக்கப்பட்டதுமே பிரச்சனை என்றும் கூறி வருகின்றனர்.

முடிவெடுத்த அஜித்
வலிமை படத்தின் வசூல் பாதிக்குமா? என்றெல்லாம் யோசிக்காமல் முன் வைத்த காலை பின் வைக்காமல் இந்த முறை படத்தை வெளியிட்டு விடுவோம் என முழு முயற்சியில் நடிகர் அஜித் மற்றும் வலிமை படக்குழு களமிறங்கி உள்ளது. ஜனவரி 13ம் தேதி திட்டமிட்டபடி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக போகிறது.

நாக சைதன்யா ரிலீஸ்
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் டோலிவுட் நடிகருமான நாக சைதன்யா சற்று முன் வலிமை படத்தின் தெலுங்கு போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார். தெலுங்கிலும் வலிமை எனும் தலைப்பிலேயே படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ஃபேன் ஆன எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் என நாக சைதன்யா தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய தேவரகொண்டாவும்
வலிமை படத்தின் தெலுங்கு போஸ்டரை நடிகர் விஜய தேவரகொண்டாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். வலிமை படத்தின் வில்லன் கார்த்திகேயாவும் அந்த போஸ்டரை ஷேர் செய்துள்ளார். மேலும், விஜய தேவரகொண்டா மற்றும் நாக சைதன்யாவுக்கு கார்த்திகேயா நன்றி கூறியுள்ளார்.

வலிமை ஹீரோயின்
வலிமை படத்தின் இந்தி போஸ்டரை வலிமை படத்தின் நாயகியும் பாலிவுட் ஹீரோயினுமான ஹூமா குரேஷியே தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். அஜித் குமார் மற்றும் ஹூமா குரேஷி இருக்கும் இந்தி பட போஸ்டர் வெளியாகி உள்ளது. நாளை வலிமை படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியிலும் வலிமை தி பவர் என்றே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











