சமந்தாதான் மருமகள்.. அவர் மேல் தப்பில்ல.. சோபிதாவுக்கு நோ.. புலம்பித் தள்ளும் நாக சைதன்யாவின் தாய்?

ஹைதராபாத்: நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா முதலில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை பாதியில் முடிவடைந்தது. இதனையடுத்து சிறிது காலம் சிங்கிளாக இருந்த சைதன்யா இப்போது நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தச் சூழலில் அவர் குறித்தும் அவரது தாய் குறித்தும் புதிய தகவல் ஒன்று உலாவுகிறது.

தெலுங்கு திரையுலகின் பவர் சென்ட்டர்களில் ஒன்று நாகார்ஜுனாவின் குடும்பம். அவரது தந்தை வழியில் தானும் நடிகனாகி தனது மகனையும் நடிகனாக்கியிருக்கிறார். அவர் லட்சுமி என்ற பெண்ணை முதலில் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் நாக சைதன்யா. பிறகு லட்சுமியை பிரிந்த நாகார்ஜுனா அடுத்ததாக நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு அகில் என்ற மகன் இருக்கிறார். நாக சைதன்யாவும் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

Samantha Naga Chaitanya Lakshmi

காதல்: தமிழில் வெளியாகி சக்கைப்போடு போட்ட விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர் சமந்தாவுடன் இணைந்து நடித்தார். படத்தில் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி ரியல் வாழ்க்கையிலும் பற்றிக்கொண்டதை அடுத்து இருவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. பெரிய குடும்பத்து மருமகளான சமந்தா திருமணத்துக்கு பிறகும் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இருவரது திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருந்தது.

முறிந்த திருமண வாழ்க்கை: நிலைமை இப்படி இருக்க யார் கண் பட்டதோ தெரியவில்லை திடீரென இருவரும் பிரிந்தார்கள். திருமணத்துக்கு பிறகு சமந்தா நடித்தது ஆரம்பத்திலிருந்தே நாகார்ஜுனா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை; இருந்தாலும் மகனுக்காக பொறுத்துக்கொண்டார்கள்; ஆனால் கவர்ச்சி வேடம் ஏற்று சமந்தா நடித்ததை அடுத்து பிரச்னை வெடித்துவிட்டது அதனால்தான் விவாகரத்து என்று ஆளாளுக்கு ஆரூடங்கள் கூறினார்கள். ஆனால் சம்மந்தப்பட்ட இருவருமே எந்த பதிலையும் சொல்லவில்லை.

நிச்சயதார்த்தம்: திருமண முறிவுக்கு பிறகு நாக சைதன்யா படங்களில் பிஸியாகியிருக்கிறார். சமந்தாவும் அப்படியே. சூழல் இப்படி இருக்க நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்துவந்தார். அவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாகார்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் விரைவில் இருவருக்குமான திருமணம் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

கோபத்தில் தாய்: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது. அதாவது நாக சைதன்யாவின் தாயான லட்சுமிக்கு சோபிதா - நாக சைதன்யா நிச்சயதார்த்தம் சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதுமட்டுமின்றி தனக்கு நெருக்கமானவர்களிடம், மருமகள் என்றால் அது சமந்தாதான். அவர் தங்கமானவர். முக்கியமாக தனது முன்னாள் கணவர் வளர்ப்பினால்தான் தனது மகனும் அவர் வழியிலேயே இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். விவாகரத்தின் வலி தனக்கு தெரியும். இதில் சமந்தாவின் தவறு எதுவுமே இல்லை. அதனால்தான் நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தத்துக்கு செல்லவில்லை; திருமணத்துக்கும் செல்லப்போவதில்லை என்று புலம்பித்தள்ளிவருவதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X