Naga Chaitanya Net Worth:சினிமா மட்டும் தொழில் இல்லை..கோடிகளில் விளையாடும் நாக சைதன்யா சொத்து விவரம்

ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் மிகவும் முக்கியமான நடிகர் நாகர்ஜுனா. இவரது தந்தை அக்கினேனி நாகேஸ்வர ராவ்வும் நடிகர் என்பதால் கடந்த மூன்று தலைமுறைகளாகவே இவர்களது குடும்பம் சினிமாத்துறையில் கொடிகட்டிப் பறக்கின்றது. அண்மையில்கூட அக்கினேனி நாகேஷ்வர ராவ்வின் 100வது பிறந்தநாளைக் கொண்டாடினர். இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். இந்த விழாவில் சிரஞ்சீவிக்கு அக்கினேனி விருது வழங்கப்பட்டது. தெலுங்கு சினிமா உலகத்தினர் மத்தியில் மிகவும் முக்கியமான குடும்பமாக கடந்த பல தசாப்தங்களாகவே அக்கினேனி குடும்பம் உள்ளது. நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யா இன்று தனது 38வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நாகார்ஜுனா மற்றும் அவரது மகன் நாக சைதன்யா என இருவருக்கும் தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்கு தமிழ்நாட்டில் கணிசமான அளவு வசூல் ஈட்டித் தரக்கூடிய அளவுக்கு ரசிகர்களும் உள்ளனர். நாக சைதன்யாவைப் பொறுத்தவரை கடந்த 1986ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி பிறந்தார். சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ள இவர், வெப் தொடர்களிலும் நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் வெளியான தூதா வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

naga chaitanya naga chaitanya net worth naga chaitanya birthday

நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. நாக சைதன்யாவைப் பொறுத்தவரையில் சோபிதா துலிபாலா இரண்டாவது மனைவிதான். இவரும் நடிகை சமந்தாவும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். மிகவும் காதலோடு மகிழ்ச்சி நிரம்பிக் காணப்பட்ட இவர்களின் திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதாவது 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாக சைதன்யா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பல கோடிகள் தொகையையும் சமந்தா வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு, விவாகரத்து கொடுத்தார்.

சொத்து மதிப்பு: நாக சைதன்யா இன்று தனது 38வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு ரசிகர்கள் தொடங்கி திரைத்துறையினர் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாக சைதன்யாவைப் பொறுத்தவரை அவரது பெயரில் மட்டும் தனிப்பட்ட முறையில் ரூபாய் 155 கோடிகளுக்கு மேல் சொத்து இருக்கின்றதாம். இதுமட்டும் இல்லாமல் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூபாய் 5 கோடிகள் முதல் ரூபாய் 10 கோடிகள் வரை சம்பளம் வாங்குகின்றார்.

சினிமா, விளம்பரம்: இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், ஸ்டார் உணவகங்களையும் நடத்தி வருகின்றார். இதில் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்த ஆண்டு முதல் இவர் நடத்திவரும் ஹோட்டலும், ஹைதராபாத் மாநகரில் 2022ஆம் ஆண்டு முதல் இவர் நடத்திவரும் ஹோட்டலும் இவருக்கு தினமும் லட்சங்களில் லாபம் சம்பாதித்துக் கொடுக்கின்றது. இதுமட்டும் இல்லாமல், இவர் பல பிராண்ட்களுக்கு பிராண்ட் அம்பாசிட்டராகவும் திகழ்கின்றார். குறிப்பாக, Ariel, Myntra, Tasva Magnum India மற்றும் Dasos கேபினெட்ஸ் போன்ற பல பிரபலமான பிராண்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிட்டராக விளங்குவதால் இதன் மூலமும் ஆண்டுக்கு பல கோடிகளை வருமானமாகப் பெறுகின்றார்.

சொத்துகள்: இது இல்லமால், கடந்த ஆண்டு ஜூப்லி ஹில்ஸில் ரூபாய் 15 கோடிகள் மதிப்பிலான மிகவும் பிரமாண்டமான வீட்டினை வாங்கினார். இது பெரும் பரபரபாக பேசப்பட்ட செய்தியாக மாறியது. ரியல் எஸ்டேட் பிஸ்னஸிலும் இவர் கவனம் செலுத்தி வருகின்றார். இவரிடம் விலை உயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகள் உள்ளன. குறிப்பாக, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-கிளாஸ் ஜி63, பெராரி எஃப்430, நிசான் ஜிடி-ஆர் போன்ற உயர்தர சொகுசுக்கார்களும் இவரிடத்தில் உள்ளது. இதில் பென்ஸ் காரின் விலை ரூபாய் ஒரு கோடி இருக்கும் என கூறப்படுகின்றது. ஃபெராரி கார் ரூபாஅய் 1.75 கோடிகள் வரை இருக்கும் எனக் கூறப்படுகின்றது. நிசான் கார் ரூபாய் 2.12 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. இவை இல்லாமல் விலை உயர்ந்த வேகமாகச் செல்லகூடிய பைக்குகளும் இவரிடத்தில் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X