சமந்தா ஹாப்பின்னா நானும் ஹாப்பிதான்... விவாகரத்து குறித்து மனம் திறந்த நாக சைத்தன்யா
ஐதராபாத் : நடிகர் நாக சைத்தன்யா -சமந்தா இருவரும் கடந்த அக்டோபர் 2ம் தேதி விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
Recommended Video
அவர்களின் விவாகரத்து குறித்த யூகங்கள், வதந்திகளுக்கு தொடர்ந்து சமந்தா கருத்து தெரிவித்து வந்தார்.
நாக சைத்தன்யா தொடர்ந்து மௌனம் சாதித்த நிலையில், தற்போது விவாகரத்து குறித்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் நாக சைத்தன்யா
நடிகர் நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டனர். டோலிவுட்டின் மனமொத்த தம்பதிகளாக வலம் வந்தனர். சமந்தா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்குள் பிரிவு ஏற்பட்டது.

விவாகரத்து முடிவு
தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் இருவரும் தங்களது விவாகரத்து முடிவை வெளியிட்டனர். இந்த விவகாரம் இந்திய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து இதற்கு காரணங்களாக பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டது.

மௌனம் கலைத்த நடிகர்
இதற்கெல்லாம் நடிகை சமந்தா பதில் தெரிவித்து வந்தார். வழக்கும் போட்டார். ஆனால் இந்த விவகாரத்தில் நாக சைத்தன்யா எந்தவிதமான ரியாக்ஷனும் காட்டாமல் மௌனமாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது தனது விவாகரத்து குறித்து அவர் மீடியா முன்பு மனம் திறந்துள்ளார்.

சரியான முடிவு
நாக சைத்தன்யா மற்றும் நாகர்ஜூனா நடிப்பில் வெளியாகவுள்ள பங்காருராஜூ படத்தின் பிரமோஷனில் பங்கேற்று பேசிய அவர், இருவரின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சமந்தாவிற்கு மகிழ்ச்சி என்றால் தனக்கும் மகிழ்ச்சியே என்றும் தெரிவித்துள்ளார்.

நாகர்ஜூனா வருத்தம்
மேலும் அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச்சரியான முடிவு அது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்த விவாகரத்து முடிவு திரைத்துறையினர் மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முடிவு மிகவும் துரதிர்ஷடமானது என்று நாகர்ஜூனா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமந்தா கோபம்
இந்த விவாகரத்திற்கு சமந்தா ஏற்று நடித்த சில கேரக்டர்களே காரணம் என்று கூறப்பட்டது. மேலும் அவர் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இல்லை என்றும் அபார்ஷன் செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த கருத்துக்களுக்கு சமந்தா கோபமடைந்து பதில் கொடுத்தது நினைவிருக்கலாம்


Click it and Unblock the Notifications











