சோபிதா பற்றி மனம் திறந்த நாக சைதன்யா.. என்ன சொன்னார் தெரியுமா?.. கொதிப்பில் சமந்தா ரசிகர்கள்

சென்னை: சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவர்களது திருமணம் டிசம்பர் நான்காம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் அன்னப்பூர்ணா ஸ்டூடியோஸில் நடக்கவிருக்கிறது. திருமண ஏற்பாடுகள் எல்லாம் ஜரூராக நடந்துவருகின்றன. இந்தச் சூழலில் தனது வருங்கால மனைவி சோபிதா பற்றி நாக சைதன்யா முதன்முறையாக ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

சமந்தாவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அவரை காதலித்தார் நாக சைதன்யா. வீட்டில் எழுந்த சில எதிர்ப்புகளை சமாளித்து; அவர்களை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு ஓகேயும் வாங்கினார். அதனையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணத்தில் இருவீட்டாரும், உறவினர்களும், இரண்டு பேரின் நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

naga chaitanya sobitha dhulipala samantha

பிரிவு: திருமணத்துக்கு பிறகு இரண்டு பேருமே சினிமாவில் தொடர்ந்து நடித்தார்கள். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு தாங்கள் பிரிவதாக சமந்தாவும், நாக சைதன்யாவும் அறிவித்தார்கள். காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி விவாகரத்து செய்துவிட்டார்களே என்று பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால் பிரிவு என்பதை இருவரும் வேண்டுமென்றே ஏற்றிருக்கமாட்டார்கள்; ஒத்துவரவில்லை என்றால் பிரிதல் நல்லதுதான் என்று ரசிகர்கள் பேசினார்கள்.

சோபிதாவுடன் காதல்: நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா இப்போதுவரை சிங்கிளாக இருக்கிறார். ஆனால் நாக சைதன்யாவோ நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார். முதலில் இருவரும் டேட்டிங் செய்து ஒருவரையொருவர் புரிந்துகொண்ட பிறகு தங்களது காதலினை வீட்டில் சொன்னார்கள். சோபிதாவும் ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நாக சைதன்யாவுக்கு முதல் திருமணம் சரியாக அமையாததால் இந்தத் திருமண வாழ்க்கையை ஒழுங்காக அமைத்துக்கொடுக்க அவரது தந்தை நாகார்ஜுனா முடிவு செய்தார்.

திருமணம்: அதன்படி சோபிதா மற்றும் அவரது வீட்டாரிடம் சகல விஷயங்களை பேசிவிட்டு திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார் அவர். அதன்படி இருவரது திருமணம் டிசம்பர் நான்காம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் அன்னப்பூர்ணா ஸ்டூடியோஸில் நடக்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் எல்லாம் தொடங்கி ஜரூராக நடந்துவருகின்றன. மேலும் இந்தத் திருமணத்தில் அமிதாப் பச்சன், அமீர் கான், எஸ்.எஸ்.ராஜமௌலி, மகேஷ் பாபு குடும்பத்தினர், ராணா டகுபதி குடும்பத்தினர் உள்ளிட்டோரை இன்வைட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களின் திருமண நிகழ்வு நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நாக சைதன்யா பேட்டி: இந்நிலையில் தனது திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார் நாக சைதன்யா. அவர் அளித்த பேட்டியில், "சோபிதா துலிபாலா என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.எனக்குள் இருக்கும் வெற்றிடத்தை அவர் நிரப்பிக்கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து புது வாழ்க்கையை தொடங்கவிருக்கிறேன். இது ஒரு அற்புதமான பயணமாக இருக்கும். ஹைதராபாத்தில் இருக்கும் அன்னப்பூர்ணா ஸ்டூடியோஸில் எங்களது திருமணம் நடக்கவிருக்கிறது.

சமந்தா ரசிகர்கள் காட்டம்: அங்கிருக்கும் எனது தாத்தாவின் சிலைக்கு முன்பு திருமணம் செய்ய வேண்டும் என எனது குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள். அந்த இடத்துக்கும் எனக்கு தனிப்பட்ட ரீதியில் ஒரு கனெக்‌ஷன் இருக்கிறது" என்றார். சூழல் இப்படி இருக்க சமந்தா விட்டு சென்ற வெற்றிடத்தை சோபிதா நிரப்புகிறாரா?.. இந்த திருமண வாழ்க்கையையாவது ஒழுங்காக கொண்டு செல்லுங்கள் என்று காட்டமாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X