என்னது 2வது திருமணமா? … ப்ளீஸ் வதந்திகளை பரப்பாதீர்கள்… நாகசைதன்யா விளக்கம் !

சென்னை : தெலுங்கு நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இதுகுறித்து உரிய விளக்கம் அளித்துள்ளார்

திரைத்துறையில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த சமந்தாவும் நாகசைத்தன்யாவும் பிரிந்தது. திரைத்துறைக்கு மட்டுமல்ல அவர்களது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நாகசைதன்யாவின் 2வது திருமணம் குறித்த பேச்சு டோலிவுட்டில் அடிபட்டு வருவதால், இனி இவர்கள் சேரவே வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர்.

காதலித்தனர்

காதலித்தனர்

நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான 'யே மாய சேசாவே' படத்தின் இணைந்து நடித்திருந்தனர். முதல் படத்திலிருந்த இவர் இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து, பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறினார் சமந்தா.

மனக்கசப்பு

மனக்கசப்பு

இதையடுத்து, சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து டாப் நடிகைகள் பட்டியலில் இருந்தார் சமந்தா. இதையடுத்து, சமந்தாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைதன்யாவின் குடும்ப பெயரை எடுத்துவிட்டு வெறும் 'S' என்று மட்டும் பதிவிட்டதால். இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் மனக்கசப்பு வெளியே தெரியத் தொடங்கியது.

பிரிந்தனர்

பிரிந்தனர்

இவை அனைத்தும் வெறும் வதந்திதான் என்று நினைத்து வந்த நேரத்தில் கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இவர்களது பிரிவு ரசிகர்களை மட்டுமில்லாது திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர்கள் இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில், திருமண புடவையை நாகசைதன்யா குடும்பத்திற்கே திரும்பி அனுப்பி அதிர்ச்சியை கொடுத்தார் சமந்தா.

2வது திருமணம்

2வது திருமணம்

இதையடுத்து, நாகசைதன்யா 2வது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும், சினிமாவில் இருப்பவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றும் இதனால் பெண் பார்க்கும் படலத்தை அவரின் பெற்றோர்கள் தொடங்கிவிட்டதாக இணையத்தில் தகவல்கள் காட்டுத் தீ போலபரவி வந்தது.

உண்மை இல்லை

உண்மை இல்லை

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாகசைதன்யா இது உண்மை இல்லை என்றும், சமந்தாவும் நானும் இன்னும் சட்டப்பூர்வமாக பிரியவில்லை என்றும் அதற்குள் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக வதந்தி பரப்புவது வருத்தத்தை அளிப்பதாகவும், தயவு செய்தி வதந்திகளை பரப்பாதீர்கள் என்றும் நாகசைதன்யா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X