ஓ சொல்றியா மாமாவுக்கு சமந்தா வாங்கியதை விட கம்மியா.. அமீர்கான் படத்தில் நாக சைதன்யா சம்பளம்?

மும்பை: வரும் ஆகஸ்ட் 11ம் தேதி அமீர்கான், நாக சைதன்யா, கரீனா கபூர் நடிப்பில் உருவாகி உள்ள லால்சிங் சத்தா திரைப்படம் வெளியாகிறது.

இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தீயாக நடைபெற்று வருகின்றன. ஒரு பக்கம் அமீர்கான், ஒரு பக்கம் நாக சைதன்யா என பேட்டிகள் ஃபயராக பறக்கின்றன.

இந்நிலையில், நாக சைதன்யாவுக்கு இந்த படத்தின் மூலம் கிடைத்துள்ள சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட்டில் சமந்தா

பாலிவுட்டில் சமந்தா

இந்தி வெப்சீரிஸான தி ஃபேமிலி மேன் 2 தொடரில் நடிகை சமந்தா ராஜி எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார். அக்‌ஷய் குமார், ஆயுஷ்மான் குரானா என முன்னணி நடிகர்கள் படங்களில் ஹீரோயினாக நடிக்க அடுத்தது ஒப்பந்தமாகி உள்ளார் சமந்தா என தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற காபி வித் கரண் நிகழ்ச்சியில் அக்‌ஷய் குமார் அலேக்காக சமந்தாவை தூக்கிட்டு வந்ததுமே சமந்தாவின் பாலிவுட் என்ட்ரி வேறலெவலில் இருக்கும் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

சமந்தாவை தொடர்ந்து

சமந்தாவை தொடர்ந்து

பாலிவுட்டுக்கு சமந்தா மட்டும் தான் செல்வாரா, நானும் போகிறேன் பாருங்க என கிளம்பிய நாக சைதன்யா அமீர்கானின் லால்சிங் சத்தா படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 11ம் தேதி பான் இந்தியா படமாக பெரியளவில் அந்த படம் உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது.

சம்பளம் எவ்வளவு

சம்பளம் எவ்வளவு

ஹாலிவுட்டில் டாம் ஹேங்ஸ் நடிப்பில் வெளியாகி ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான லால்சிங் சத்தா படத்தில் நடிக்க நாக சைதன்யாவுக்கு 4 கோடி முதல் 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சைடு ரோல்

சைடு ரோல்

டோலிவுட்டில் ஒரு படம் நடிக்க 10 கோடி ரூபாய் வரை நாக சைதன்யா சம்பளம் வாங்கி வரும் நிலையில், பாலிவுட்டில் சைடு ரோல் என்பதால் இவ்வளவு கம்மியான சம்பளம் அவருக்கு வழங்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், இந்த படம் நாக சைதன்யாவுக்கு பாப்புலாரிட்டி கொடுத்தால் பாலிவுட்டில் தனிப்படமே அவர் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஐட்டம் சாங்கிற்கே 5 கோடி

ஐட்டம் சாங்கிற்கே 5 கோடி

அதே நேரத்தில் புஷ்பா எனும் தெலுங்கு படத்தில் ஓ சொல்றியா மாமா எனும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடவே நடிகை சமந்தாவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸிலும் சமந்தாவுக்கு சூப்பர் சம்பளம் கிடைத்தது என்றும், பாலிவுட்டில் அவர் அறிமுகமாகவுள்ள படத்தில் 10 கோடிக்கும் மேல் சம்பளம் என்கின்றனர்.

விஜய்சேதுபதி நடிச்சிருந்தா

விஜய்சேதுபதி நடிச்சிருந்தா

இந்தி வெப்சீரிஸில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு 35 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லால் சிங் சத்தா படத்தில் விஜய்சேதுபதி நடித்திருந்தால் அவருக்கு அதிக சம்பளத்தை அமீர்கான் வழங்கி இருப்பார் என்றும், நாக சைதன்யாவின் மார்க்கெட் குறைவு என்பதால், இதுவே அவருக்கு அதிகம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X