நாக சைதன்யா படம் தள்ளிப் போக சமந்தா காரணமா
நாக சைதன்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் ஷைலஜா ரெட்டி அல்லுடு படம் அவர் மனைவி சமந்தவால் தள்ளிப்போகும் பரிதாபம்
Recommended Video

ஹைதராபாத்: நாக சைதன்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் ஷைலஜா ரெட்டி அல்லுடு படம் அவர் மனைவி சமந்தாவால் தள்ளிப் போயுள்ளதாம்.
டோலிவுட்டின் பிரபல காதல் ஜோடி என்றால் அது நாக சைதன்யா, சமந்தா தான். இவர்கள் சினிமா வட்டாரத்தில் பலர் வியக்க வாழ்ந்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பின்பு நாக சைதன்யா நடிக்கும் படங்களில் சமந்தா தலையிட்டு தன் கருத்துக்களை தெரிவிப்பதோடு தன்னால் முடிந்த சில மாற்றங்களைச் செய்வதாகவும் கூறுகின்றனர்.
இதுபோலவே அடுத்து வெளியாக இருக்கும் ஷைலஜா ரெட்டி அல்லுடு படத்தின் எடிட்டிங் வேலையில் சமந்தா சில மாற்றங்களைச் செய்ய சொல்லி இருக்கிறார். இதனால் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருந்த அப்படம் தள்ளி போகிறது.
இதுபற்றி நாக சைதன்யா கூறும் போது, படத்தின் ரீ ரெக்கார்டிங் வேலை கேரளாவில் நடந்து வருகிறது. அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தான் தாமதம் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











