2வது மனைவியோட ஊர் பெருமை பேச ஆரம்பித்த நாக சைதன்யா.. சாய் பல்லவி படத்துக்கு புரமோஷனை பார்த்தீங்களா!
ஹைதராபாத்: இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் திரைப்படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வருகிறது. அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு பெரிதாக ஓபனிங் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், டோலிவுட் ரசிகர்களை வெகுவாக இந்த படம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திடிரேன தெலுங்கு பட இயக்குநர்கள் எல்லாம் கடல் சார்ந்த படங்களை எடுப்பதில் அதிக ஆர்வத்தை காட்ட ஆரம்பித்துவிட்டனர் என தெரிகிறது. கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடித்த தேவரா திரைப்படம் இதே போல வெளியான நிலையில், அந்த படம் பெரிதாக வெற்றிபெறவில்லை.

இந்நிலையில், நாக சைதன்யா நடித்துள்ள தண்டேல் திரைப்படத்தில் சுதந்திர உணர்வு எல்லாம் வலிய திணித்து இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன. இதற்கிடையே படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக விசாகப்பட்டினம் சென்றிருந்த நடிகர் நாக சைதன்யா தனது மனைவியின் ஊர் இது என பெருமை பேசியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தொடர் தோல்வி: நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்ததில் இருந்தே நாக சைதன்யாவுக்கு சினிமாவில் தொடர்ந்து தோல்விகள் குவிந்து வருகின்றன. பாலிவுட்டில் அமீர்கான் படத்தில் இவர் அறிமுகமான நிலையில், லால் சிங் சத்தா படம் அட்டர் ஃபிளாப் ஆனது. அதன் பின்னர் தமிழில் மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில், தண்டேல் படத்தை ரொம்பவே நம்பிக் கொண்டிருக்கிறார். சாய் பல்லவியின் லக் இந்த படத்தை வெற்றிப் படமாக மாற்றுமா என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

2வது மனைவியின் பெருமை: சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு சோபிதா துலிபாலாவை ரகசியமாக காதலித்து வந்த நாக சைதன்யா கடந்த ஆண்டு இறுதியில் அவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில், இரண்டாவது மனைவி வந்த நேரம் நாக சைதன்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிக் கிடைக்கும் என குடும்பமே காத்திருக்கிறது. தனது 2வது மனைவியான சோபிதா துலிபாலாவின் சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நாக சைதன்யா தனது படங்கள் எப்போது ரிலீஸ் ஆனாலும், விசாகப்பட்டினத்தில் ஓடியதா? என்று தான் முதலில் பார்ப்பேன். இங்கே ஓடினால், உலகம் முழுவதும் அந்த படம் வெற்றியடைந்துவிடும் என்பது எனது நம்பிக்கை. தயவு செய்து இந்த முறையும் எனக்கு விசாகப்பட்டினம் மக்கள் கை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். இல்லையென்றால் வீட்டம்மா என்னை கலாய்த்துவிடுவார் என பேசியுள்ளார்.
சாய் பல்லவி லக்: அமரன் வெற்றிக்குப் பிறகு சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்திலும் ஹீரோ தேசப்பற்றுடன் இருப்பதால் ரசிகர்களை கனெக்ட் செய்துவிடும் என எதிர்பார்க்கின்றனர். இந்தியில் ராமாயணா படத்தில் சீதையாகவும் சாய் பல்லவி நடித்து வரும் நிலையில், நாக சைதன்யாவுக்கு இந்த படம் பான் இந்தியா வெற்றியை கொடுக்க சாய் பல்லவி முக்கிய காரணமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிமல் படத்தில் நடித்த நடிகர் பப்லு பிருத்விராஜ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











