நாகசைதன்யா படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு.. செட்டை அடித்து நொறுக்கிய மக்கள்..அதிர்ச்சியில் படக்குழு!
சென்னை : நாகசைதன்யாவின் பட ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்குள் மக்கள் திடீரென புகுந்து செட்டை அடித்து நொறுக்கியதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகர் நாகசைதன்யா, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்து NC22 படத்தின் படப்பிடிப்பை துவக்கி இருக்கிறார். இந்தப் படம் நாகசைதன்யாவின் முதல் தமிழ் படமாக இருக்கும்.
இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் இதுதான் முதல் தெலுங்கு படம். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

நடிகர் நாகசைதன்யா
ஸ்ரீனிவாசா சித்தூரி ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனர் ரின் கீழ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். படத்தில் இன்னொரு நல்ல செய்தி மாஸ்ட்ரோ இளையராஜாவும், லிட்டில் மாஸ்ட்ரோ யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தின் ஆல்பத்தில் பணிபுரிவது இதுவே முதல்முறை. நடிகர் நாகசைதன்யா இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் படமாக உருவாகிறது.

இருமொழிகளில்
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. அழகான காட்சிகளை படமாக்குவதில் திறமையான ஒளிப்பதிவாளரான எஸ்.ஆர்.கதிர் இந்தப் படத்தில் இணைகிறார். படத்தின் வசனத்தை அபூரி ரவி எழுதுகிறார். படத்தின் எடிட்டிங்கை வெங்கட் ராஜன் கையாள்கிறார்.

கர்நாடகாவில் படப்பிடிப்பு
தயாரிப்பு வடிவமைப்பிற்காக படக்குழு திறமை மிக்கவரான ராஜீவை தேர்வு செய்துள்ளது. கலை இயக்கத்தை சத்யநாராயணா கையாள உள்ளார். முக்கிய சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக சர்வதேச ஆக்ஷன் இயக்குநரான யானிக் பென் இதில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள மேலகோட் என்ற கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

செட்டை அடித்து நொறுக்கிய மக்கள்
இந்நிலையில் கோயில் அருகே மதுபான கடை போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், கோவில் அருகே மதுபான கடையா என அந்த செட்டை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே அந்த நேரத்தில் நடிகர் நாகசைதன்யாவும் அங்கேதான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











