சோபிதாவுடன் இன்னைக்கு கல்யாணம்.. ஆனாலும் சமந்தாவோடு இருக்கும் போஸ்ட்டை டெலிட் செய்யாத நாக சைதன்யா!
ஹைதராபாத்: இணையத்தில் நுழைந்தாலே நாக சைதன்யா சோபிதா துலிபாலா திருமணம் தொடர்பாகதான் செய்திகள் டன் கணக்கில் குவிகின்றன. அதிலும் நாக சைதன்யாவின் முன்னாள் திருமணம் குறித்த தகவல்களை பலரும் இப்போது கிளறிக் கொண்டிருக்கின்றனர். நாக சைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். நான்கு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியர், அதன் பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர்தான், நாக சைதன்யா, சோபிதாவுடன் டேட் செய்யத் தொடங்கி, இப்போது திருமணத்திற்கு வந்துள்ளார். இப்படியான நிலையில் நாக சைதன்யா தனது இன்ஸ்டாகிராமில், சமந்தாவுடன் இருக்கும் பதிவினை இப்போதுவரை டெலிட் செய்யாமல் உள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அக்கினேனியின் மகன் நாகார்ஜுனா. இவர் தனது தந்தையின் உள்ளீட்டினால் சினிமாவிற்குள் நுழைந்திருந்தாலும் அவரது, திறமையால் சினிமாவில் இன்றைக்கு தவிர்க்க முடியாத நபராக உள்ளார். இவரது மகன் நாக சைதன்யாவும் அப்படித்தான், தனக்கான இடத்தினை தானே உருவாக்கி வளர்ந்து வருகின்றார். நாக சைதன்யாவும் சமந்தாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் மிகவும் கோலாகலமாக கோவாவில் நடைபெற்றது. திருமணம் கிருஸ்துவ முறைப்படி நடைபெற்றது.

இப்படியான நிலையில் இவர்களது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. திருமணம் முடிந்த மறுநாள் தனது படுக்கை அறையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இவரது இந்தப் பதிவுக்கு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் இருந்தது. ஆனாலும் தெலுங்கு சினிமா உலகிலும் சரி, தென்னிந்திய சினிமா உலகிலும் சரி, மிகவும் ரொமான்டிக்கான ஜோடியாக இந்த ஜோடி இருந்தது.

சமந்தா: மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள், 2021ஆம் ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவிக்கும்போது, ரசிகர்களுக்கு இதயமே வெடித்துவிட்டது. விவாகரத்துக்குப் பின்னர், சமந்தா மையோசிடிஸ் நோய் பாதிப்பால், சிகிச்சையில் ஈடுபட்டுக் கொண்டும், படங்களில் நடித்துக் கொண்டும் உள்ளார். இப்படியான நிலையில், விவாகரத்துக்குப் பின்னர், நாக சைதன்யா சமந்தா குறித்த இன்ஸ்டாகிராம் பதிவுகளை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்காமல் அப்படியே வைத்துள்ளார்.
காரணம்: இப்படியான நிலையில் திருமணத்திற்குப் பின்னர் இருவரும் இணைந்து நடித்த தெலுங்கு படம், மஜிலி. இந்தப் படத்தின் போஸ்டரை நாக சைதன்யா இன்னும் டெலிட் செய்யாமல் உள்ளார். அதேபோல், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் சமந்தா குறித்த ஒரே பதிவு இது மட்டும்தான். இதனை கவனித்த இணையவாசிகள் பலரும், சமந்தா மீது இன்னும் அந்த பழைய காதல் இருப்பதால்தான் நாக சைதன்யா டெலிட் செய்யாமல் உள்ளார் எனவும், சிலர், இது படத்தின் போஸ்டர். அதனால்தான் அவர் அதனை டெலிட் செய்யாமல் உள்ளார் எனவும் பேசி வருகின்றனர்.

திருமண நேரம்: சோபிதாவை கரம் பிடிக்கப்போகும் நாக சைதன்யா இன்னும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஜிலி படத்தின் போஸ்டரை வைத்துள்ளார் என்றால் அதனை சினிமாவாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் சொந்த வாழ்க்கைக்குள் எடுத்துக் கொள்ளக்கூடாது எனக் கூறியும் வருகின்றனர். இப்படியான நிலையில், இன்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி இரவு 8.13 மணி அளவில் சோபிதாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications











