நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் LIVE: தாலி கட்டியாச்சு.. கல்யாண புகைப்படங்கள் இதோ!

ஹைதராபாத்: நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவின் 2வது திருமணம் இன்று அன்னபூர்ணா ஸ்டூடியோவில் உறவினர்கள் மற்றும் திரையுலகினர் சூழ கோலாகலமாக நடைபெறவுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் நடித்த சோபிதா துலிபாலாவை தான் நாக சைதன்யா 2வதாக திருமணம் செய்யப்போகிறார்.

முன்னாள் மனைவி சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு நாக சைதன்யா பிரிந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார். இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றித்திரிந்த புகைப்படங்கள் எல்லாம் லீக்கான நிலையில், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி நாக சைதன்யா சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை நடிகர் நாகார்ஜுனா தனது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு சந்தோஷ செய்தியை அறிவித்தார். அதன் பின்னர், நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டனர். இந்நிலையில், டிசம்பர் 4ம் தேதியான இன்று நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் இந்து முறைப்படி இன்று நடைபெறுகிறது.

இன்று நாக சைதன்யா திருமணம்: நடிகர் நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லக்‌ஷ்மி டகுபதிக்கும் கடந்த 1986ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்தவர் தான் நாக சைதன்யா. நாகார்ஜுனா தனது முதல் மனைவியை பிரிந்துவிட்டு நடிகை அமலாவை 2வதாக திருமணம் செய்த நிலையில், அவருடைய மகனான நாக சைதன்யா தனது முதல் மனைவி சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகை சோபிதா துலிபாலாவை இன்று 2வதாக திருமணம் செய்துக் கொள்கிறார்.

naga chaitanya sobhita dhulipala wedding

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X